தினப்புயல் ஊடகவியலாளர் இம்மானுவேல் தர்சன் வவுனியா பொலிசாரினால்  அதிரடிக் கைது – ஊடகவியலாளர்கள் பார்வையிடவும் மறுப்பு – ஊடகவியலாளர்களுக்கான அராஜகம் மீண்டும் ஆரம்பம்;

130

தினப்புயல் ஊடகவியலாளர் வவுனியா இம்மானுவேல் தர்சன் பொலிசாரினால்  விசாரனைக்காக அழைக்கப்பட்டு 02-11-2018 இரவு 7.00 மணிக்கு கைதுசெய்யப்பட்டார் . அதிரடிக்கைது ஊடகவியலாளர்கள் பார்வையிடவும் மறுப்பு – ஊடகவியலாளர்களுக்கான அராஜகம் மீண்டும் ஆரம்பம். வவுனியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் தினப்புயல் பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஏன் கைது செய்தீர்கள் என வவுனியா பொலிஸ் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, கடந்தவாரத்தில் வவுனியாவில் ஆவாக்குழு தொடர்பாக வெளிவந்த செய்தியில் உண்மைத்தன்மை இல்லையென்றும், குறித்த ஊடகவியலாளரினால் இச் செய்தி பரப்புரை செய்யப்பட்டதென்றும், ஊடகவியலாளர் ஒருவர் ஒரு செய்தியை அல்லது வெளியிடுகின்ற துண்டுப்பிரசுரங்களை பொலிசாரிடம் காண்பித்த பின்பே வெளியிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் தொடர்கின்றன. ஊடகவியலாளருக்காண சுதந்திரம் மறுக்கப்படுகின்ற தன்மையே இதனை எடுத்துக்காட்டுகிறது. மகிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராகப் பதவி ஏற்று ஓர் இரு நாட்களுக்குள்ளேயே ஊடகவியலாளர்களுக்கு நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

ஆவாக் குழுக்களுடன் யாழ்ப்பாணத்தில் தொடர்புடைய பொலிஸ் ஆமி, பிரபல்ய வர்த்தகர்கள், அரசியல் வாதிகள் என்று அதன் பின்னணியில் செயல்ப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர். இவர்களே குறித்த ஆவாக்குழுவின் பின்னணியில் இருப்பதால் அப்பாவி பொது மக்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். யார்? யார்?  பின்னணியில் செயல்படுகிறார்கள் என்பது தொடர்பில் நாம் உண்மை நிலையை வெளிவிடுவோம். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 35 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தொடரும்…

 

SHARE