வவுனியா ஊடகவியலாளரை கைது செய்தமை ஊடகவியலாளர்களையும், ஊடகத்துறையையும் அச்சுறுத்தும் செயல்

27

எமது ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் சிரேஷ்ட ஊடகவியலாளரான இம்மானுவேல் தர்ஷன் அவர்களை வவுனியா பொலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்தமை எமது பத்திரிகை நிறுவனத்தையும் ஒட்டுமொத்த ஊகவியலாளர்களையும் அச்சுறுத்தும் செயலாகவே நாம் பார்க்கிறோம். கடந்த 02-11-2018 (வெள்ளிக்கிழமை ) வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் இ. தர்ஷன் பணிபுரியும் ஊடகத்தின் (தினப்புயல்) பணிப்பாளர் சத்திவேல் பிரகாஸ் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏனைய ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆவாக்குழு சம்பந்தமான துண்டுப்பிரசுரம் ஒன்றை  எமது காரியாலயத்திற்கு எடுத்து வந்து அதனை இணையதளத்தில் வெளியிட்டதன் காரணத்தினால் அவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்திருக்கிறார்கள். இதனை நாம் ஊடக நிறுவனம் என்ற வகையில் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 

இது உண்மையில் மனித உரிமை மீறலாகதான் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். இவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்த பின்னர் ஊடகவியலாளர்கள் பலர் அங்கு  பார்வையிடச்  சென்றிருந்தோம்.

பார்வையிட கூட அவர்கள் விடவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து அவர்களை சிறையில் அடைப்பது போல் தனிமையாக சிறையில் அடைத்து வைத்தார்கள். இரவு ஒரு மணிவரையும் ஊடகவியலாளர்கள் அங்கிருந்தோம்.

இது ஊடக தர்மத்தை மீறுகின்ற ஒரு செயலாக ஊடகத்திற்கு ஒரு அச்சுறுத்தல் விடுக்கின்ற செயலாகவே காணப்படுகிறது.  அதன்பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கின்ற போது கூட தீவிரவாதியை அழைத்துச் செல்கின்றது போல்  நடத்தி கூட்டிக்கொண்டு சென்றிருந்தார்கள். இதை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.  திங்கட்கிழமை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த இருக்கின்றார்கள்.

இத்தகையதொரு செயலானது ஊடக தர்மத்துக்கு  உகந்தது அல்ல. ஊடகவியலாளர்களை மீண்டும் மீண்டும் இந்த அஅரசாங்கங்கள்  அச்சுறுத்தி கிட்டத்தட்ட 35 ஊடகவியலாளர்கள் இதுவரையிலே சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். ஆகவே மீண்டும் இந்த ஊடகவியலாளருக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுகின்றது. இந்த போக்கினை நாம் அனுமதிக்க முடியாது.

இவ்வாறான செயல்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க வருகின்ற அரசாங்கங்கள் ஊடகவியலாளர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிட்டிருந்தார்.

SHARE