விபத்தில் சிக்கி இளைஞன் பலி

152

சிலாபம் – மகவெவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து நேற்றைய (04-11-2018) தினம் இடம்பெற்றுள்ளது.

அதிவேகமே குறித்த விபத்துக்கு காரணமாயுள்ளது. மாதம்பை – மெதகம பகுதியில் வசிக்கும் தனுக உதேஷ் (வயது27) எனும் இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதுண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என மாரவில பொலிசார் தெரிவித்தனர்.

SHARE