இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் இயான் மோர்கன், தனது நீண்ட கால தோழியான தாரா ரிட்ஜ்வே-ஐ திருமணம் செய்துள்ளார்.
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் இயான் மோர்கன்(32), சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று கொடுத்தார். அத்துடன் அந்த தொடரில், இரண்டு அரைசதங்களுடன் 195 ஓட்டங்கள் குவித்தார்.
இந்நிலையில், மோர்கன் தனது நீண்டகால தோழியான தாரா ரிட்ஜ்வே-ஐ கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணம், இங்கிலாந்தின் சோமர்செட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பேபிங்டன் ஹவுஸில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழாவில் சக அணி வீரர்களான ஜேசன் ராய், அலெஸ்டர் குக், ஸ்டீப் பின், மார்க்வுட், ஜோஸ் பட்லர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தனது தொடர்பான புகைப்படத்தை மோர்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘தாரா ரிட்ஜ்வேயுடன் என்ன ஒரு அருமையான நாள்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.