பொலிசார் முன்பு நிர்வாணமாக நடக்கவிட்டதால் அவமானமடைந்த மாணவி எடுத்த சோக முடிவு

229

ஸ்கொட்லாந்து நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 21 வயதான கல்லூரி மாணவி, தன்னை பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் நிர்வாணமாக நடக்கவிட்டதால் தற்கொலை செய்துகாண்டுள்ளார்.

Katie Allan என்ற கல்லூரி மாணவி ஏப்ரல் மாதம் குடிபோதையில் வாகனம் ஓட்டி, நபர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். தெரியாமல் இந்த தவறை செய்துவிட்டதாக கூறிவந்தார். மேலும், இவருடன் இருந்த சக கைதிகள் இவரை உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

சிறையில் இருந்த போது மன அழுத்தத்தின் காரணமாக இவரது தலைமுடி கொட்டியுள்ளது. இந்நிலையில், சிறையில் பொலிசார் முன்னிலையில், நிர்வாணமாக அணிவகுப்பு செய்ய வைத்த காரணத்தால் அவமானம் அடைந்துள்ளார்.

இதனால், சிறையில் தனது முடிவை தேடிக்கொள்ள முடிவுசெய்த இவர், தற்கொலை செய்துகொண்டார். தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சிறையில் எனது மகளுக்கு பிற கைதிகளால் பிரச்சனை இருந்தபோதும் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

எனவே இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

 

SHARE