பிரித்தானியாவில் தோல் நிறத்திற்கு ஏற்றவகையிலான பாதணிகள் தயார்

39
பிரித்தானியாவில் முதன்முறையாக வௌ்ளையினத்தவர் அல்லாத பெல்லட் நடன கலைஞர்களுக்காக கபில நிறம் மற்றும் அவர்களின் தோல் நிறத்திற்கு ஏற்றவகையிலான பாதணிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தவகையான பாதணிகள் அவர்களின் ஏனைய அணிகலன்களுடன் மிகவும் பொருந்துவதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் பழைமை வாய்ந்த ‘ஃப்ரீட் ஒப் லண்டன்” நிறுவனத்தினரால் இந்த பாதணிகள் தயாரிக்கப்படுகின்றன. புதிய வகையான பாதணிகள் கபில நிறம், வெண்கல நிறம் மற்றும் பாரம்பரிய இளஞ்சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன.

குறித்த பெல்லட் நடன கலைஞர்கள், பெல்லட் கறுப்பின நடன நிறுவனத்தின் சார்பில் பணியாற்றுகின்றனர், அவர்களில் பெரும்பாலும் கருப்பின பிரித்தானியர்கள் மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் உள்ளடங்குகின்றனர். அவர்களுக்காகவே இந்த வகையான விசேட பாதணி சோடிகள் தயாரிக்கப்படுகின்றன.

முன்னர் இளஞ்சிவப்பு நிற பாதணிகளை பயன்படுத்தும் பொருட்டு நடன கலைஞர்கள் அழகு மேம்படுத்தல் சாதனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும், தற்போது இயல்பாகவே இந்த பாதணிகளை பயன்படுத்தி தம்மால் நடன திறமைகளை வௌிக்கொணர முடியும் என்று பிளெக் பெல்லட் இளம் கலைஞரான மாரி அஸ்ட்ரிட் மென்ஸ் தெரிவித்துள்ளார். கபில நிற பாதணி தனது தோலின் நிறத்துடன் ஒத்துப் போவதால் தான் மிகவும் புத்துணர்வுடன் செயற்படுவதாக அவர் கூறுகிறார்.

“நீங்கள் இந்த நடனத் துறையில் ஒரு பங்காளராக உணர்வதற்கும், எந்தவொரு விடயத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்கும் இந்த பாதணிகள் உதவுகின்றன. உங்கள் தோலின் நிறத்தில் பாதணிகள் கிடைத்து விட்டன. எனவே நம்பிக்கையுடன் செயற்படலாம்” என்று மாரி அஸ்ட்ரிட் குறிப்பிடுகிறார்.

SHARE