கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 12 பேர் பலி

165

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் மேற்கொண்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE