மலையாள படமொன்றில் நடிக்கவிருக்கிறார் – விக்ரம்

174
நடிகர் விக்ரம், 18 ஆண்டுகளுக்கு பின்னர் அன்வர் ரஷித் இயக்கும் மலையாள படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம், ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் படம் என நடித்து வரும் நடிகர் விக்ரம், அடுத்து வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அன்வர் ரஷித் இயக்குகிறார்.

மலபார் கலகம் அல்லது மாப்பிள்ளை கலகம் என்று அழைக்கப்படும் வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது.

கேரளாவில் மலபார் பகுதியில், ஆங்கிலேயே அரசுக்கு எதிராக தொடங்கிய இந்த கலகம் பிறகு பெரும் இனக்கலவரமாக மாறியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

1921-ம் ஆண்டு நடந்த வரலாற்று சம்பவத்தை அன்வர் ரஷித் படமாக்குகிறார். இந்தக் கதையில் சுதந்திரப் போராட்ட வீரர், வரியன்குன்னத் குஞ்சாசமாகத் ஹாஜியாக விக்ரம் நடிக்கிறார்.

மலபார் கலகத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 2021-ஆம் ஆண்டு இந்த படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE