திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் – ஹன்சிகா

173

திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இதனால்தான் நிறைய கதைகளை தவிர்த்து விட்டேன் என நடிகை ஹன்சிகா குறிப்பிட்டுள்ளார்.

புதிய நடிகைகள் வரவால் ஹன்சிகாவுக்கு படங்கள் குறைந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சினிமா வாய்ப்புகள் குறைந்ததாக சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இவ்வளவு சின்ன வயதில் 50 படங்களில் நடித்து விட்டேன். இத்தனை படங்களில் நடித்து இருப்பது ரொம்ப பெரிய விடயம்.

கடந்த ஒரு ஆண்டில் 18 புதிய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. 18 கதைகள் கேட்டேன். ஆனால் அதில் 4 படங்களில் மட்டுமே நடித்தேன். எனவே எனக்கு வாய்ப்புகள் வராமல் இல்லை. இதுவரை கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தேன்.

இனிமேல் அதுமாதிரி நடிக்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். வெறும் கவர்ச்சியை மட்டுமே நம்பாமல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இதனால்தான் நிறைய கதைகளை தவிர்த்து விட்டேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE