புருவ சீரமைப்பால் ஏற்படும் பிரச்சனைகள்

186

பெண்கள் தங்களின் கண்களை அழகுபடுத்துவதற்காக புருவத்தை சீரமைப்பார்கள், மேலும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் ஏராளம்.

புருவ சீரமைப்பு செய்வதால் ஏற்படும் விளைவுகள்
  • புருவ முடிகள் வளரும் இடம் பிராணன் இயங்கும் இடமாக கருதப்படுகிறது. இறப்பு நெருங்கும் போது புருவ முடிகளைத் தொட்டாலே, கையில் வந்து விடும். அந்தளவுக்கு உயிருக்கும், புருவ முடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
  • புருவ முடிகளை அழகாக்க நினைத்து அடிக்கடி முடியை எடுப்பது, உயிர் நிலையோடு தொடர்பான வர்ம இடங்களை பலவீனப்படுத்தும்.
  • பின் அந்த பலவீன நிலையானது, பெண்களுக்கு குணமாக்க முடியாத பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • புருவ சீரமைப்பால், பெண்களின் பிராண சக்தி குறைந்து, ஆயுள் நாட்களும் குறைந்து, பிராண சக்தி குன்றிய மற்றும் ஆரோக்கியம் குறைவான குழந்தைகளை பிறக்க நேரிடுகிறது.
  • எனவே வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின்காந்த சக்தியை, எந்த வழியிலும் சிதைக்கக் கூடாது என்பதால் புருவ முடியினை சீரமைக்கக் கூடாது.
  • ஏனெனில் நம் உடலின் முக்கிய சக்தி கண்களுக்கு அருகில் இருப்பதால், அந்த இடங்களில் முடியினை எடுக்கவே கூடாது. இல்லையெனில் அது பெரிய ஆபத்தாகிவிடும்.
குறிப்பு
  • நம் கண்களை அழகுபடுத்த சுத்தமான விளக்கெண்ணையை கண் புருவங்களில் தீட்டலாம். இதனால் நமது ஆயுளையும், புருவங்களின் அழகையும் நீண்ட நாள் பாதுகாக்க முடியும். 

SHARE