பாத வெடிப்பு அதிகமாக பாதிப்பது ஆண்களையே

179

ஆண்களுக்கு எப்போதுமே வேலை சுமை அதிகமாகவே காணப்படும். இதன் போது அதிக நேரம் தங்களது பாதங்களை பயன்படுத்துகின்றனர்.

அதே சமயத்தில் பாதங்களை பற்றி கொஞ்சமும் கண்டு கொள்வதும் இல்லை.

இந்த நிலை பல நாட்களாக இருந்தால் பாத வெடிப்பு, காயங்கள், அரிப்புகள் என பல தொற்றுகள் வர தொடங்கும். பிறகு வீக்கம் ஏற்பட்டு நடக்க கூட முடியாத நிலை ஏற்படலாம்.

இதற்கு கண்ட கண்ட மருந்துங்களை போடுவதை தவிர்த்து விட்டும் வீட்டிலே செய்ய கூடிய எளிய வைத்திய முறையை பார்ப்போம்.

வெடிப்புகளை மறைய வைக்க கூடிய ஆற்றல் கற்றாழைக்கு உள்ளது. இதனை வைத்து கொண்டு பாதவெடிப்பை எப்படி போக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையானவை
  • கற்றாழை ஜெல் 3-4 பீஸ்
  • மஞ்சள் பொடி 1 ஸ்பூன்
  • சந்தனம் 1 ஸ்பூன்
  • வேப்பிலை பொடி 1 ஸ்பூன்
செய்முறை

முதலில் கற்றாழையை நன்றாக அரைத்து கொள்ளவும்.

பிறகு இதனுடன் மஞ்சள், சந்தனம், வேப்பிலை பொடி ஆகியவற்றை கலந்து பாதத்தில் தடவவும்.

30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் பாதத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்புகள் காணாமல் போய் விடும்.

SHARE