ஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன்

75

ஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் தற்போது உள்ள 4G தொழில்நுட்ப வலைமைப்பினை 5G தொழில்நுட்ப வலையமைப்பிற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் தற்போது 5G தொழில்நுட்பத்தினை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இம் முயற்சிகள் அனைத்தும் அனேகமாக 2019 ஆம் ஆண்டில் வெற்றியளிக்கும்.

அதனைத் தொடர்ந்து 5G மொடத்தினை உள்ளடக்கிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE