திட்டமிட்ட முறையில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட தினப்புயல் சிரேஸ்டஊடகவியலாளர் வவுனியா நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை

202

 

வவுனியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் தினப்புயல் பத்திரிகையின் சிரேஸ்ட ஊகவியலாளர் இம்மானுவேல் தர்சன் 02-11-2018 அன்று பொலிசாரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார் எந்தவித ஆதாரங்களும் இன்றி ஆவா குளுவின் துண்டுப்பிரசுரத்தை தினப்புயல் பத்திரிகையில் வெளியிட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்து சிறையில் அடைக்கப்ட்டார் இக்கைது தொடர்பில் வவனியா மனிதஉரிமை ஆனைக்குளுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது விடுதலை செய்யப்பட்ட  இம்மானுவேல் தர்சனுடன் சக ஊடகவியலாளர்களையும் நீதிமன்றத்தின் முன் காணலாம்

பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து எமது சக ஊடகவியலாளரை சிறையில் அடைக்க முற்பட்ட போது சட்டத்தரணிகளின் கடும் விவாதங்களின் பின் பிணையில் மீட்டெடுத்து வந்த வேளை  இம்மானுவேல் தர்சனுடன் சக ஊடகவியலாளர்கள்

வவுனியா வவுனியாவில் ஆவா குழு துண்டு பிரசுரம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதிமன்றம் பிணை!! வவுனியாவில் ஆவா குழு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் (02-11-2018) கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரை பிணையில் செல்ல வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (05) அனுமதி வழங்கியுள்ளது. வவுனியாவில் இருந்து வெளிவருகின்ற தினப்புயல் பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளராகிய இம்மானுவேல் தர்ஷன் என்பவரே பொலிசாரினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம்  அவரை விடுதலை செய்து வழக்கை ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது. ஆவா குழுவின் பிரசுரம் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மற்றுமோர் இளைஞனை பார்வையிட வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் தன்னை கைது செய்த பொலிசார் தன்மீது ஆவா குழுவிற்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக வழக்கு பதிவு செய்து தடுத்து வைத்ததாக தர்சன் தெரிவித்தார். விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய ஊடகவியலாளர் சார்பில் சட்டத்தரணி தயாபரன் மற்றும் திலீப்காந்தன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கும் நிலையில் பொலிசார் ஊடகவியலாளர் ஒருவரை எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்திருப்பதானது ஒரு அச்ச நிலையை உருவாக்கும் என்பதுடன் அச்சிடப்பட்ட ஒரு பிரதியை ஊடகவியலாளர் ஒருவர் வைத்திருந்தார் என்பதற்காக எவ்வாறு அவரை பொலிசார் கைது செய்ய முடியும் என மன்றில் கேள்வி எழுப்பினர் சட்டத்தரணிகள். குறித்த ஊடகவியலாளரிடமிருந்து எத்தகைய துண்டு பிரசுரங்களையும் பொலிசார் கைப்பற்றியிருக்கவில்லை என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், அத்தகைய பிரசுரம் தொடர்பாக எவராவது பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர்தான் வினியோகம் செய்தார் என்றோ அல்லது அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றோ முறைப்பாடுகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தனர், நீதிமன்றம் குறித்த ஊடகவியலாளருக்கு பிணை வழங்க வேண்டும் என கோரினர் இதனையடுத்து பொலிசார் தகுந்த ஆதாரங்கள் எதனையும் நீதிமன்றத்தில் முன்வைக்க முடியாத காரணத்தினால் மன்று ஊடகவியலாளர் தர்சனை ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.

SHARE