சிங்கள பேரினவாதிகளில் யார் உத்தமன்

50

 

சிங்கள பேரினவாதிகளில் யார் உத்தமன் சிங்கள பேரினவாதிகளில் யாருக்கும் ஆதரவு கொடுத்து எதுவும் நடக்கபோவதுமில்லை தீர்வு கிடைக்க போவதுமில்லை. எமக்கான தீர்வு கொடுக்கபடமாட்டாது எடுக்கபட வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு கொடுத்தால் என்ன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு கொடுத்தால் என்ன. 2009 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த சுதந்திர கட்சி யுத்த குற்றவாளிகள் என்றால் இந்த யுத்தத்திற்கே வித்திட்டது ஐக்கிய தேசியக் கட்சி அது மறந்து போய்விட்டதா??
1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியும் முதலாவது ##நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமாக பதவியேற்றுக் கொண்ட ஜே.ஆர். ஜயவர்தனா அவர்களே “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் எனப்பேசி” இலங்கையில் முதலாவது தமிழர்கள் மீதான இனக்கலவரத்துக்கு வித்திட்டவர். இது 1977இல் இக்கலவரம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்தது தான் 1983 ஜூலைக் கலவரம். அப்போது ஆட்சியில் இருந்ததும் ஐக்கிய தேசியக் கட்சியே.
### ஜூலை கலவரத்தின் கோர முகம்
கறுப்பு ஜுலை 1983 !!

கறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து வருடங்கள் நிறைவடைந்து விட்டது. கறுப்பு ஜுலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும் காயமாக ஆறாமல் ஆடிக்கலவரம் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களிடத்தில் இந்தக் கறுப்பு ஜுலைதான் வரலாற்றை திருப்பிப் போடத் தொடங்கியது. இனவெறி வன்முறைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழ் மக்களிடத்தில் ஆறாக காயங்களை நெஞ்சில் உருவாக்கியது. தமிழ் இனத்திற்கு விடுதலையும் நாடும் உரிமையும் தேவை என்கிற அவசியத்தை ஏற்படுத்தியது.

இலங்கைத்தீவும் ஈழமும் வெடித்து இரண்டு நிலங்கள் என்ற உகளாக உள்ளன என்ற உண்மையை உணர்த்தியது. சிங்களவர்களுடன் தமிழர்கள் ஒரு பொழுதும் சேர்ந்து வாழ முடியாது என்கிற அனுபவக் கொடுமை நிகழ்ந்தது. கறுப்பு ஜுலையின் சாட்சியங்கள் இன்றும் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கறுப்பு ஜுலைக் காலத்தில் குழந்தைகளாயும் கருவுற்றும் இருந்தவர்கள் இன்றும் நமது மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழரும் தனக்கு புத்தி ஏற்படுகிற காலத்தில் தனது இனத்தை குறித்து அறியத் தொடங்கும் காலத்தில் கறுப்பு ஜுலையைத்தான் முதலில் படிக்கிறார். ஈழத் தமிழ் இனம் எதிர் கொண்ட வரலாற்றின் மிகப் பெரும் பயங்கரத்தை படிப்பவர்கள் எல்லோரது நெஞ்சும் உடைந்து போகின்றன.

1983 ஜுலை 23ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் திருநெல்வேலி, தபால்பெட்டி சந்திப் பகுதியில் இலங்கை இராணுவத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு லெப்.கேணல் கிட்டு, லெப்.கேணல் விக்டர், லெப்.கேணல் பொன்னம்மான், லெப்.கேணல் அப்பையா, லெப். செல்லக்கிளி அம்மான், மேஜர் கணேஸ் உட்பட்ட பல போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டார்கள்.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்த புலிகள் முதன் முதலில் திருநெல்வேலியில் நடத்திய தாக்குதல் இராணுவத்தினருக்குப் பெரும் இழப்பைக் கொடுத்தது. பலாலியில் இருந்து விடுதலைப் புலிகளை தாக்கும் திட்டத்துடன் வந்த இராணுவ அணியினரை இலக்கு வைத்து புலிகள் தாக்குதலை நடத்தினர். கண்ணிவெடித் தாக்குதலையும் துப்பாக்கிப் பிரயோகத்தையும் நடத்தியிருந்தார்கள். இந்த தாக்குதல் சமரில் 13 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் மேற்க் கொண்ட இந்தத் தாக்குதலை அடுத்து கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டன. தமிழர்கள் சிங்களவர்களை கொன்று விட்டார்கள் என்று கொதித் தெழுந்த காடையர்கள் கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் எங்கும் தேடித் தேடி அழிக்கத் தொடங்கினார்கள். கொழும்பு நகரமே ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் நனைந்தது.

கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிர்பாராத வகையில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு நகரில் வேரோடியிருந்த அவர்களின் வாழ்க்கை பலமாகவும் செழிப்பாகவும் இருந்தது. தமிழர்களோடு தமிழர்களிடமிருந்த வர்த்தக நிறுவனங்களும் வீடுகளும் இலக்கு வைக்கப்பட்டன. தமிழர்கள் தெருத் தெருவாக பிடித்து வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டார்கள். தமிழர்களின் வீடுகளைத் தேடிச் சென்று காடையர்கள்படுகொலைகளை நிகழ்த்தினார்கள். வர்த்தக நிலையங்களை அடித்து நொருக்கி எறித்தார்கள். வன்முறைத் தாக்குதல்களில் தமிழர்களின் சொத்துக்களையும் சூறையாடினார்கள். கொழும்பில் உயிரைக் காக்க தமிழர்கள் அலைந்தார்கள்.

மத நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் உயிரை காக்க தஞ்சமடைய தமிழர்கள் ஓடினார்கள். காடையர்களோ தமிழர்களை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்றார்கள். வயது முதிர்ந்தவர்கள் முதல் அனைவரும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தி கொல்லப்பட்டார்கள். காடையர்களுடன் புத்த பிக்குக்களும் பொல்லுத்தடிளுடனும் வாட்களுடனும் தமிழர்களைத் தேடித் தேடிக் வெட்டி அடித்துக் கொல்ல அலைந்தார்கள். சுற்றிச் சுற்றி நடத்தப்பட்ட இந்தப் படுகாலை ஈழத் தமிழர்களை உலுப்பிப் போட்டது. தமிழ் இனத்தில் பெரும் காயத்தை கீறியது.

இந்த வன்முறை நாட்களில் இலங்கை முழுவதும் வன்முறைகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஜுலை 24 மற்றும் 25ஆம் நாட்களில் இராணுவத்தினரால் படுகொலைகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழர்கள் புலிகள் என்ற பேரில் படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப்போலவே வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள். 53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் துன்புறுத்திப் படு கொலை செய்யப்பட்டார்கள். ஜுலை 25 அன்று 33 கைதிகளும் ஜுலை 28 அன்று 18 கைதிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலையின் பொழுதே குட்டிமணிஇ தங்கத்துரைஇ ஜெகன் முதலிய போராளிகளும் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையும் தமிழர்களின் இரத்தத்தில் நனைந்தது.

இந்த இனப் படுகொலை யாவும் மிகவும் திட்டமிட்டே மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் இனத்தை அழித் தொழிக்கவும் இலங்கைத்தீவிலிருந்து துடைத் தெறியவும் ஈழத் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இந்தப்படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு அரிசியல் படுகொலையாகவே நடந்திருக்கிறது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக ஈழப் போராட்டம் மலர்ந்திருந்த அந்த நாட்களில் போராட்டத்தை முடக்கவே இந்தப்படுகொலை அப்போதைய அரசால் மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சுகந்திர இலங்கை எனக் கூறப்பட்ட காலத்தின் பின்னர் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இலங்கைத் தீவிலிருந்து தமிழர்களைத் துடைக்கவும் இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. அதன் உச்ச கட்டமாக கறுப்பு ஜுலை அரங்கேறியது.

ஈழ – இலங்கை அரசியல் நில முரண்பாட்டை கறுப்பு ஜுலைப் படுகொலையின் இரத்தம் தெளிவாக பிரித்து வரைந்திருக்கிறது. இலங்கைத்தீவை சிங்களவர்களிடம் வெள்ளையர்கள் கையளித்து விட்டுப் போனதிலிருந்து தமிழர்களுக்கான அரசியல் மற்றும் உரிமை நிராகரிப்புக்கள் ஏற்படத் தொடங்கின. தமிழர்கள் உரிமையற்றவர்களானார்கள். தமிழர்களிடத்தில் இருந்து சிறியளவான அரசியல் இடங்களும் சிங்கள ஆளும் தரப்புக்குப் பிரச்சினையாக இருந்தது. தமிழ் அரசியல்த் தலைவர்கள் சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகளை கோரி வந்த சூழலில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இருந்த பிரதேசங்களில் ஒடுக்முறைகளும் இன வன்முறைகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. இலங்கைக்கு சுகந்திரம் கிடைத்தது என்ற பொழுது சிங்களவர்கள் தமிழர்ளை அழிக்கத் தொடங்கினார்கள்.

1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து தனிச்சிங்களச்சட்டமும் பௌத்த மயமாக்கலும் பிரகடனப் படுத்தப்பட்ட வேளை தமிழர்கள்மீதான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்டது. 1956இல் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனவெறி வன்முறை தாக்குதல் கல்லோயா குடியேற்றத்த திட்டத்தில் அரற்கேற்றப்பட்டது. இதில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்hர்கள். சிங்கள மொழியை ஆட்சி மொழியாக அறிவித்தத்தைத் தொடர்ந்து தமிழ் அரசியல் தலைவர்கள் சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது அவர்கள்மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தே கல்லோயா குடியேற்றத்திட்டதில் இனவெறி வன்முறை வெடித்தது. இந்தத் தாக்குதலும் ஈழப் போராட்டத்தின் அவசியத்தை தமிழர்களுக்கு உணர்த்தி அவர்களின் தாயகம் பற்றிய அக்கறையை ஏற்படுத்தியது.

மீண்டும் 1958இல் இனக்கலவரம் வெடித்தது. பொலனறுவையில் தொடங்கி கொழும்புவரை நடந்த இந்த இனவெறித்தாக்குதலில் 300 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலின் பொழுது தமிழர்களும் திருப்பி சிங்களவர்களைத் தாக்கத் தொடங்கியிருந்தார்கள். கத்திகளுடனும் பொல்லுகளுடன் வந்த சிங்களக் காடையார்கள் தமிழர்களை வெட்டி குத்தி தீயிட்டு எரித்தார்கள். இதனைத் தொடர்ந்து 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் பொழுது 11 பேர் இலங்கை காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். 1977இல் மீண்டும் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலில் 500க்கு மேற்பட்டவர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டார்கள். இதில் அநுராதபுரம் பகுதியில் தொடரூந்திற்காக நின்ற மக்களும் வெட்டிச் சாய்த்துக் கொல்லப்பட்டார்கள்.

இதனுடைய தொடர்ச்சியான வன்முறையாக 1981இல் யாழ்ப்பாண நூல் நிலையம் எரிக்கப்பட்டது. தென் கிழக்காசியாவில் மிகப் பெரிய நூலமாக 97 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்களுடன் இருந்த யாழ் நூலகம் ஈழத் தமிழ் மக்களின் வரலாற்று பண்பாட்டு அறிவுப் பொக்கிசமாக விளங்கியது. அந்த யாழ் நூலகத்தை 31 மே 1981 அன்று சிங்களக் காடையர்கள் தீயிட்டு எரித்து அழித்தார்கள். தமிழர்கள்மீதான வன்முறைகள் அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்ததைத் போலவே யாழ் நூலக தீயிடலும் அரசியல் பழி வாங்கலாக நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் யாழ் நூலகத்துடன் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இலங்கைத் தீவில் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறிப் படுகொலைகள் வன்முறை நடவடிக்கைகள் எல்லாமே தமிழர்கள்மீதான அரசியல் உரிமை மறுப்பிற்காகவும் ஒடுக்குமறைக்காகவுமே மேற்கொள்ளப்பட்டன. அதனுடைய உச்சக் கட்ட வன்முறையாக நிகழத்தப்பட்ட கறுப்பு ஜுலை ஏற்கனவே அந்தக் காலப் பகுதியில் அப்போதைய அரசால் திட்டமிடப்பட்டிருந்தது.

திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்து எதிர்பார்க்கப்பட்ட வன்முறை அரங்கேற்றப்படடது. தமிழ் அரசியல் போக்கை மழுங்கடித்து ஈழத் தமிழர்களின் உணர்வின் கூர்மையை மழுங்கடித்து சிங்களப் பேரினவாத ஆட்சியை தமிழர்கள்மீது திணிக்கவே இந்த வன்முறைகள் நடத்தப்பட்டன. பேரினவாத அரசியலுடன் தமிழ் அரசியல் தலமைகள் நடத்திய போராட்டத்தின் தோல்வி நிலையிலும் தமிழர்கள்மீதானபடுகொலைக்கு எதிராகவுமே விடுதலைப் புலிகளும் ஏனைய போராளி இயக்கங்களும் தேற்றம் பெற்றன. தனி ஈழம் என்கிற போராட்டமுமு; பரிணமித்தது.

இலங்கையை ஆண்டு வந்த ஒவ்வொரு அரசும் தமிழர்கள்மீது வன்முறைகளையும் படுகொலைகளையும் திணித்து தமிழ் அரசியலை ஒடுக்குவதில் ஒரே விதமாகவே செயற்பட்டார்கள். செயற்பட்டு வருகிறார்கள். கறுப்பு ஜுலையுடன் தமிழர்கள்மீதான வன்முறைப் படுகொலைகள் முடிந்து போகவில்லை. 1987இல் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை ஒப்பிரேசன் லிபிரேசன் என்ற நடவடிக்கையின் மூலம் கைப்பற்றும் தாக்குதல் யுத்தத்தை இலங்கை இராணுவம் தொடங்கியது. ஆதன் பிறகு யுத்தச் சமர்கள் மூலமாகவும் தமிழிழனப் படுகொலை மிக அதிரகித்து. அதன் பின்னர் தமிழர்கள் புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தொடர் படுகொலைகளில் அழிக்கப்பட்டார்கள். அந்தபடுகொலை இன்றைய காலம் வரை தொடர்நகிறது.

வல்வை நூலகப் படுகொலை, குமுதினிப் படுகொலை, அம்பாறை உடும்பன் குளம் படுகொலை, கொக்கட்டிச் சோலைபடுகொலை, 1987 வீரமுனைப் படுகொலை, சத்துருக் கொண்டான் படுகொலை, யாழ் நாகர்கோவில் சிறுவர்படுகொலை, நவாலி தேவாலயப்படுகொலை, களுத்துறை சிறைச்சாலைப் படுகொலை, பிந்துணுவோவா படுகொலை, செஞ்சோலைப் படுகொலை போன்றவைகளுடன் இவைகளுக்கு இடையிலான இராணுவ நடவடிக்கையின்படுகொலைகள் உதிரியாகவும் தொகுதியாகவும் நடந்துள்ளன. அத்தோடு நான்காம் ஈழப் போரில் மட்டக்களப்பு 2006படுகொலைகள் யாழ்ப்பாணப் படுகொலைகள் வன்னிப் போர்ப் படுகொலைகள் 2006-2009மேஇஅதன் பின்னரானபடுகொலைகளும் என்று ஈழத் தமிழ் இனம் படுகொலைகளால் எச்சரிக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டு அழித் தொழிக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவே வரலாற்றுத் துயரமாகவும் தொடர்கிறது.

1983 ஜூலை இனப்படுகொலை நடந்து இன்று முப்பத்தொரு வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரையில் தமிழ் இனத்தை அழிப்பது தொடர்பில் இலங்கையை ஆண்ட எந்தவொரு சிங்கள அரசுக்கும் குற்ற உணர்வு வரவில்லை. மாறாக தொடர்ந்தும் ஒவ்வொரு அரசுகளும் இனப்படுகொலைகளையே ஒன்றை ஒன்று விஞ்சி மேற்கொள்கிறது. முப்பது வருடங்களாக ஏற்படாத நல்லிணக்கமும் புரிதலும் இனி எப்போது ஏற்படும்? இன்னமும் ஈழத் தமிழர்கள் அழித்தொழிக்கபபட வேண்டியவர்களாகவும் எந்த ஒரு உரிமையுமற்றவர்களாகவே ஒடுக்கப்படுகின்றனர். முப்பது வருடங்களாக ஒடுக்கி அழிக்கும் ஒரு தரப்போடு இணைந்து வாழச் சொல்வது என்பது இனப்படுகொலைகளினால் அழிந்து போகச் சொல்வதே.

இவை எல்லாமே இணைந்த தேசத்தில் சிங்கள தேசம் ஈழ மக்களுக்கு உரிமைகளை பகிரவும் சமமாக நடத்தவும் மறுத்திருக்கும சூழ்நிலையை மாத்திரம; உணர்த்தவில்லை. சிங்கள தேசம் இந்தப் படுகொலைகள் யாவற்றையும் நிறுத்தத் தயாரில்லை என்பதையும் தமிழ் மக்களை ஒழித்தே தீருவோம் என்பதில் கொண்டிருக்கும் தீவிரத்தையுமே நமக்கு உணர்த்துகின்றன. இவ்வளவு படுகொலைகளையும் செய்தவர்கள் இன்னமும் ஒடுக்கி அழிக்க மூர்க்கத்தோடு இருக்கும்போது ஒடுக்கப்படும் ஒரு இனம் இதையெல்லாம் எவ்வாறு மன்னிப்பது? ஒடுக்கி அழிக்கப்புடும் தரப்பு நல்லிணக்கத்திற்கு தயாரில்லை என்றபோது நல்லிணக்கம் என்பதே இன அழிப்பு எனும்போது இழந்த தேசத்தை மீள நிறுவி வாழ்வதே ஒரு இனத்திற்கு பாதுகாப்பானது.

இலங்கைத் தீவில் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜுலை படுகொலை நிகழ்வும் அதற்கு முன்னரான நிகழ்வுகளும் தெற்கிலிருந்த தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி செல்லத் தூண்டியது. அவர்கள் சிங்களப்பகுதிகளை விட்டு தமிழர் பகுதிகளுக்கு வந்தார்கள். இலங்கைத்தீவு இரண்டாக உடைந்தது. மலையகத் தமிழர்களில் கணிசமானவர்களும் வடக்குக் கிழக்கை வந்தடைந்தார்கள். தெற்கில் கட்டவிழ்த்து விடப்பட்டபடுகொலைகள் வடக்கு கிழக்கில் யுத்தம் என்ற பேரில் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தமிழர்களுக்கு அவர்களது நிலம் தேவை என்பதையும் உரிமை தேவை என்பதையும் விடுதலை வேண்டும் என்பதையும் கறுப்பு ஜுலையினால் ஏற்பட்ட துயரம் வலிமையாக வரைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தென்ன என்றும் ஈழத் தமிழ் இனத்தின் நெஞ்சில் காயாத இரத்தமாக கறுப்பு ஜுலையும் வலித்துக் கொண்டுதானிருக்கிறது.

நான்இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்.. தனக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட போகிறது என்பது தெரிந்திருந்தும் இறப்பு பற்றிய கவலையோ பயமோ இன்றி இறப்பின் பின்பும் விடுதலை பெற்ற தாயகத்தைத் தன் கண்களால் காண வேண்டும் என்ற அவனின் உன்னத வேட்கை அங்கே கொழுந்துவிட்டு எரிகிறது.

அவனுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பெழுதுகிறது. அவன் வெலிக்கடைச் சிறையில் தாயக விடுதலைக்காகத் தான் எழுதப் போகும் தியாக வரலாற்றைப் பதிவு செய்யும் நாளுக்காகக் காத்திருக்கிறான்.

1983 ஜூலை 25

கொடிய குற்றங்களுக்காகச் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளின் கூண்டுக் கதவுகள் திறக்கின்றன. கொடிய கொலை வெறியுடன் வெளியே ஓடி வந்த அவர்களுக்கு சிறையின் பண்டகசாலை திறந்து விடப்படுகிறது. அவர்கள் இரும்புச் சட்டங்கள், கோடாரிகள், கொட்டன்கள் எனக் கைக்குக் கிடைத்தவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.

விடுதலைப் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் கொட்டடிகள் சிறைக் காவலர்களால் திறந்து விடப்படுகின்றன.

சிங்களக் கைதிகளின் கொலைவெறி ஆரம்பமாகிறது. நிராயுதபாணிகளான தமிழ் கைதிகள் கொடூரமான முறையில் தாக்கப்படுகின்றனர். வெறுங்கைகளால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் தமிழ்க் கைதிகளின் முயற்சி சாத்தியமற்றுப் போகிறது.

படுகாயமடைந்து குருதி வெள்ளத்தில் துடித்த அவர்கள் சிறையின் புத்தர் சிலை முன் இழுத்துக் கொண்டு வந்து போடப்படுகின்றனர். கருணையையும் அன்பையும் போதித்த கௌதம புத்தரின் காலடியில் பிணங்கள் குவிகின்றன.

மண்டைகள் பிளக்கப்படுகின்றன. வயிறுகள் கிழிக்கப்படுகின்றன, கை, கால்கள் வெட்டப்படுகின்றன, ஆணுறுப்புகள் அறுக்கப்படுகின்றன. தமிழீழத்தைக் காண தன் தன் கண்களை இன்னொருவனுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்ட குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்படுகின்றன.

குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் உட்பட 34 தமிழ் இளைஞர்கள் அங்கு சிதைக்கப்பட்ட பிணங்களாக விழுந்து கிடக்கின்றனர்.

மூன்று நாள்கள்

அத்துடன் அடங்கியதா இனவெறிக் கொலைஞர்களின் காட்டுமிராண்டித்தனம்? இல்லை, மூன்றாம் நாள் மீண்டும் ஆரம்பமாகியது. அடைக்கப்பட்ட சிறைக் கூண்டுகளின் கதவுகளை உடைத்துத் திறந்து மேலும் 18 கைதிகளைக் கொன்று தள்ளினர்.

இவை வெலிக்கடைப் படுகொலையின் குருதி படிந்த கொடிய நினைவுகள். இனவெறிக் கொடூரத்தின் அழிக்க மடியாத பதிவுகள், வெலிக்கடைச் சிறையில் இப்படியொரு மிருகவெறிக் கொலைகள் அரங்கேற்றப்பட சிறைக்கு வெளியேயும் பிணத் திண்ணிகளின் பேயாட்டம் கோலோச்சுகிறது.

தமிழன் என அடையாளம் காணப்படும் எவனும் கொல்லப்பட்டான். தமிழர் கடைகள், இருப்பிடங்கள், சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் நடத்தப்பட்டன.

பொலிஸார் முன்னிலையில் ஆட்சியாளர்கள் மறைமுக அங்கீகாரம் வழங்க ஒரு பெரும் இன அழிப்பு தென்னிலங்கையில் அரங்கேற்றப்பட்டது. அந்த அரங்கேற்றம்தான் தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் கைகளில் ஆயுதம் ஏந்தியே ஆக வேண்டும் என்ற செய்தியை தமிழருக்கு உணர்த்தியது.

இந்தச் சிறைச்சாலைப் படுகொலைகளுக்கும் தென்னிலங்கை எங்கும் தமிழ் மக்கள் நரவேட்டையாடப்பட்டமைக்கும் திருநெல்வேலியில் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலே காரணம் எனக் கூறப்பட்டது.

ஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்குமிடையே படையினர் கொல்லப்படும் போது அதில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் மீது பழி தீர்ப்பது இலங்கையின் ஆட்சியாளர்களின் கோழைத்தனமான அரசியல் நாகரிகம்.

அதுமட்டுமல்ல 1983 ஜூலை இன அழிப்பு சிங்கள மக்கள் கொதிப்படைந்து மேற்கொண்ட எதிர்பாராத சம்பவமல்ல. அது அரச தரப்பால் நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து முடுக்கி விடப்பட்ட ஓர் அகோரத் தாண்டவம்.

ஒரு தாக்குதலில் படையினர் எவராவது இறந்தால் அவர்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுவது தான் வழமையான நடைமுறை.

இனப்படுகொலை

ஆனால் திருநெல்வேலியில் சாவடைந்த படையினரின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவர்களின் உறவினர்கள் அவர்களின் சொந்த ஊர்களிலிருந்து கொழும்புக்கு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.

புறநகர்ப் பகுதிகளின் காடையர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கனத்தையில் திரட்டப்படுகின்றனர். அமைச்சர்களாக சிறிஸ் மத்யூ, அத்துலத் முதலி ஆகியோர் தலைமையில் ஒரு பெரும் இன அழிப்புக்குத் திட்டமிடப்படுகின்றது.

அதன் படி பொறளையில் உள்ள பெட்டிக் கடைகளில் பெற்றோல் கலங்கள், வாள்கள், இரும்புப் பொல்லுகள் என்பன தயாராக வைக்கப்படுகின்றன. படையினரின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. திடீரெனக் கூட்டத்தினர் மத்தியில் யாழ்ப்பாணத்தில் ஒரு புத்த பிக்கு உயிருடன் எரிக்கப்பட்டார் என்ற வதந்தி பரப்பப்படுகிறது.

ஒரு சில நிமிடங்களிலேயே பொறளையில் உள்ள தமிழர்களின் கடைகள் எரிகின்றன. வீதியில் சென்ற தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். பலர் கொல்லப்படுகின்றனர்.

அதேநேரத்திலேயே கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் மீதான இன ஒழிப்பு பரவுகிறது. அடுத்தநாள் விடியும்போதே தென்னிலங்கையின் முக்கிய நரங்களில் எல்லாம் தமிழர்களின் இரத்தம் ஓட ஆரம்பிக்கிறது.

பல ஆயிரம் தமிழர்கள் பலி கொள்ளப்படுகின்றனர். சொத்துகள் சூறையாடப்படுகின்றன. கடைகள் வீடுகள் எரியூட்டப்படுகின்றன. பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். சிலர் வாகனங்களுக்குள் வைத்து உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்.

தண்டிக்கப்படாத குற்றங்கள்

இந்தப் பயங்கர இன அழிப்பின் ஒரு பகுதியாகத்தான் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 25, 28ஆம் திகதிகளில் 54 தமிழ்க் கைதிகள் குதறப்பட்டுக் கொல்லப்பட்டனர். சிறைச்சாலை என்பது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீதித்துறையின் ஒரு முக்கிய அங்கம். அது நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றும் கடப்பாடு கொண்டது.

சிறைச்சாலை எவருக்கும் தண்டனை வழங்கிகத் தீர்ப்பளிக்க முடியாது. ஆனால் வெலிக்கடைச் சிறைச்சாலை 54 கைதிகளுக்கு எந்தவொரு நீதிமன்றத்தின் உத்தரவுமின்றி சாவுத் தண்டனை வழங்கியது.

இந்தப் படுகொலைகள் இடம்பெற்று முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. பல அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிட்டன. அன்று சிறைக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை. படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு தடுக்க முயலாத காவலர்கள் தண்டிக்கப்படவில்லை.

நேரடியாகப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்களக் கைதிகள் தண்டிக்கப்படவில்லை. இவை தொடர்பாக எந்தவொரு நீதிமன்றமும் கேள்வி எழுப்பவில்லை. இது இலங்கையின் ஜனநாயகம்.

ஆனால் அந்தக் கொலைகளில் முன் நின்று பணியாற்றிய கைதிகள் நெடுங்கேணியில் உள்ள திறந்த வெளிச்சிறைக்கு அனுப்பிக் கௌரவிக்கப்பட்டனர். அங்கு போயும் அவர்களுக்கு இரத்த வெறி அடங்கவில்லை. காட்டில் வேட்டை யாடதேன் எடுக்கச் செல்லும் தமிழர்களின் கழுத்துக்களை காத்திருந்து வெட்டிக் குருதி குடித்தனர். வருடங்கள் 30 போய்விட்டன.

மாறாத நாகரிகம்

ஆட்சிகள் மாறி மாறி அதிகாரத்துக்கு வந்தபோதும் சிறைச்சாலைக்குள் கைதிகளைப் படுகொலை செய்யும் நாகரிகம் மட்டும் மாறவில்லை. எவரும் தண்டிக்கப்படுவதுமில்லை.

இலங்கையின் சிறைக் கொலைகள் சம்பிரதாயத்தின் அடுத்த சாதனை பிந்துனுவௌப் படுகொலைகள். விடுதலைப்புலிகள் எனச் சந் தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் புனர்வாழ்வு முகாம் அது.

ஒரு நாள் இரவு அந்த முகாமின் கதவுகள் சிறைக் காவலர்களால் திறந்து விடப்படுகின்றன. இந்த ஊரைச் சேர்ந்த பலர் துப்பாக்கிகள் உட்படப் பல்வேறு ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து கொள்கின்றனர்.

இளைஞர்கள் மேல் கொலை வெறியாட்டம் நடத்தப்படுகிறது. தடுப்பதற்கு எவருமே இல்லாத நிலையில் 28 இளைஞர்கள் பிணமாகச் சாய்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.

இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேன்முறையீட்டில் அவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர். இதன் பின்பு சிறைச்சாலை என்பது தமிழ்க் கைதிகள் எந்த நேரமும் பலமோசமாகத் தாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பது மாற்ற முடியாத நியதியாகிவிட்டது.

ஏதோவொரு காரணம் கூறப்பட்டு தமிழ்க் கைதிகள் அடித்து நொருக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதும் அவர்களில் சிலர் இறந்துவிடுவதும் இப்போதெல்லாம் சாதாரண விடயங்களாகி விட்டன.

நீதி இல்லை

அண்மையில் வவுனியாவில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தம்மேல் வழக்குத் தொடர வேண்டும் எனக் கோரிப் போராட்டம் நடத்திய கைதிகள் தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடித்து நொருக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் உயிரிழந்தனர். இப்படியாக வெலிக்கடையில் 1983 ஜூலையில் தொடங்கிய சிறைப்படுகொலைகள் இன்றுவரை 30 வருடங்களாகத் தொடர்கின்றன.

இந்தப் படுகொலைகள் தமிழ் மக்களுக்கு ஒரு திட்டவட்டமான செய்தியைச் சொல்லி வைக்கின்றன. அதாவது இலங்கையின் ஆட்சியாளர்களிடம் தமிழர்கள் எப்போதுமே நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதுதான் அது.

குட்டிமணியின் கண்கள்

எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும். – குட்டிமணி

விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டிமணி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா யோகச்சந்திரன்.

ஈழத் தமிழர்களின் இன்னல்கள் நிரந்தரமாகக் களையப் படவேண்டுமென்றால் தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர் குட்டிமணி. அந்த விடுதலை வீரரை 08-05 1981 அன்று சிங்களக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிங்கள நீதிமன்றம் அவருக்கு மரணதன்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிபதி குட்டிமணியின் இறுதி ஆசையைக் கேட்டபோது, அதற்கு குட்டிமணி கூறிய பதில் அவரது உள்ளக் கிடக்கையையும் விடுதலைமேல் அவர் கொண்டிருந்த தீராத பற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.”

இதுதான் அந்த விடுதலை வீரரின் கடைசி ஆசை. அதற்குப் பின் அவர் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டார். அந்தச் சிறையில் ஏற்கனவே பல சிங்களக் கைதிகளும் தமிழ்க் கைதிகளும் இருந்தனர். சிங்களக் கைதிகள் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்தனர். தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை வைக்கப் பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக் கலவரம் மூண்டது. யூலை மாதம் 24 ஆம் திகதி தொடங்கிய அந்தக் கலவரம் பல வாரங்கள் தொடர்ந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். பலர் உயிரோடு கொழுத்தப் பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P.) கலவரத்தை அடக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்ததுமில்லாமல் கலவரத்தை மேலும் தூண்டும் வேலைகளிலும் இறங்கியது.

இந்தக் கலவரத்தின் தீ வெலிக் கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளையும் பற்றிக் கொண்டது. சிறைக் காப்பாளர்கள் அந்தச் சிங்களக் கைதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர். கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயதங்களுடன் தமிழ்க் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களை வெட்டி வீழ்த்தினர். குட்டிமணியின் கடைசி ஆசையை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த அந்தச் சிங்களக் கைதிகள் அவரை வெட்டிப் படுகொலை செய்தது மட்டுமல்ல அவரது கண்களைத் தோண்டி எடுத்து அதை தங்களது கால்களால் நசுக்கி அழித்தனர். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர்.

குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க்களத்தில் தங்கள் உயிர்களைக் காணிக்கையாக்கிக் கொண்டனர். இவர்கள் எதைக் கேட்டார்கள்? உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்ட தங்கள் மக்களுக்காக நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் விடுதலையையும் கேட்டார்கள்.

### இவ்வாறு இலங்கை ஆண்ட ஆளும் வர்க்கம் மாறிமாறி இனப்பிரச்சினை தீர்வு வழங்காமல். இழுத்தடிப்பு செய்து. கொண்டு தான் இருக்க போகிறது. தீர்வு அதிகாரப்பகிர்வு என்பது ஆட்சியாளர்கள் கையில் இல்லை அது ஒவ்வொரு பெரும்பான்மை இனத்தவரின் மனநிலையில் ஏற்பட வேண்டியது. அரசியல் செய்பவர்கள் மாறி மாறி இனவாதத்தைக் கக்கியே அரசியல் பண்ண போறன்.
இவ்வாறு நிலைமை இருக்கும் போது. தீர்வு பெறுகிறோம் பெறுகிறோம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி காலம் தொட்டு அறுபது வருடங்களாக ஏமாத்திக் கொண்டும் ஏமாந்து கொண்டும் ஒரு கூட்டம்… தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ தமிழ் அரசியல் வாதிகளும் குடும்பமும் நல்லா வாழ்கிறார்கள் தானே இவனுகளை நம்பி சிலதுகள். …

கொஞ்சம் போலி முகநூலை வைத்து அடியுமில்லை முடியுமில்லாமல் என்னடா அரசியல் பேசுறீங்க.
அடேய் மகிந்த வெளிப்படையாக செய்வதை ரணில் மறைமுகமாகவும் குள்ளமாகவும் செய்பவன்டா 2004 யுத்த நிறுத்தத்தின் போதே அவண்ட புத்தியை காட்டிட்டான் மகிந்தவும் சரிதான் மைத்திரியும் ரணிலும் சரிதான் அவன் அவனுடைய இனத்தின் புத்தியைத்தான் காட்டுவான். நாமதான் புத்திசாலித்தனமாக அவனுகளுடைய அரசியல் நாடகத்தை அவர்களுக்கே கற்றுக்கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து அமல் துரோகி கருணா துரோகி கமல் துரோகி என்று கூவுறிங்க. முதல் இந்த fake id எல்லாம் யாருக்கும் சார்பில்லாமல் நடுநிலையாக நின்று யோசிங்க. எல்லாவற்றையும் இழந்த பிறகு யாருக்குடா கொடுக்கிற இந்த தீர்வை. வடக்கு மாகாணம் போலில்லை கிழக்கு மாகாணம் மூன்று இனமும் சராசரியாக வாழும் இடம் இங்கு ஒருவன் பின் வாங்கினால் அடுத்தவன் ஏறி மிதித்து தடம் தெரியாமல் பண்ணிட்டு போயிடுவான். அண்மையில் கிழக்கில் இடம்பெற்ற நில ஆக்கிரமிப்பு அதிகார துஷ்பிரயோகங்கள் சிறந்த எடுத்துக்காட்டு அப்போது எங்கோ கிழக்கு மாகாணத்தான் துரோகி என்று கூறுகின்ற தியாகிகள் அரசியல் பிரதிநிதிகள் எங்கே போயிருந்தார்கள். கிழக்கில் தமிழர்களது நிலை இதுதான் நமது இருப்பையும் பலப்படுத்த வேண்டிய தேவை நம்மிடமே உள்ளது.சுவர் இல்லாமல் எங்கே சித்திரம் வரைவது.
வியாளனேந்திரன் அமைச்சு பதவி பெற்றுள்ளார் என்றால் வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பியது நீங்கள் தானே அவருடைய பதவியை வைத்து கிழக்கில் தமிழர் இருப்பைக்காக்க முடிந்த வேலைகளை செய்ய முன் வாருங்கள். அதை விடுத்து. சிங்கள பேரினவாதிகளின் அடிமைகளாக இருந்து மூடர்களாக வராலாறுகளை தொடர வேண்டாம்.

கொள்கை வாதிகள் கொள்கை வாதிகள் என்று எல்லாவற்றையும் கொள்ளைகொடுத்து விடாதிங்கடா.

###தமிழனுக்கான உரிமை ஒரு போதும் கிடைக்காது அதை நாமே எடுக்க வேண்டும்

பா.உமாசுதன்.

SHARE