ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் தேவைப்படலாம். ஆனா எத்தன யுகம் வந்தாலும் இவர மாதிரி தலைவன் கிடைப்பது அரிதே. 

அந்த வயசுல அரசயே எதிர்த்து போராட தைரியம்? போராட்டம்னா வெற்று உண்ணாவிரதமோ கண்டன பொதுகூட்டமோ இல்ல. உயிரை பணயம் வைத்து எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துவது. துப்பாக்கி சுட்டு தானே பழகுறது மறைவான காட்டு வாழ்க்கை? கையில பணமும் கிடையாது. அடுத்தவேளை உணவுக்கோ தங்குமிடத்துகோ உத்திரவாதம் இல்ல. அது போக இளைஞர்களை இயக்கத்துல சேர்த்தது. அவங்களுக்கு பயிற்சி கொடுக்குறது, பணம் சேர்க்குறது, ஆயுத கொள்முதல், தாக்குதல் திட்டம், படைகளை உருவாக்குறது, நவீன தொழில்நுட்பங்கள பயன்படுத்துறது, இயக்கத்துல உள்ள கருப்பாடுகள சமாளிக்குறது, ராஜதந்திர பேச்சுவார்த்தைகள், இன்னொரு பக்கம் மக்களுக்கான திட்டங்கள செயல்படுத்துறது, முக்கியமாக போராளிகளுக்கு மனதைரியம் குறையாம பாத்துகுறது வியந்துகிட்டே போகலாம் இன்னும்…


ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் தேவைப்படலாம். ஆனா எத்தன யுகம் வந்தாலும் இவர மாதிரி தலைவன் கிடைப்பது அரிதே.

நவம்பர் தலைவர் பிறந்தமாதம். அவரின் வீரத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள். தமிழன் அப்பவே அப்படி வாழ்ந்தான் இப்படி வாழ்ந்தான் எல்லாம் தமிழன் கண்டுபுடிச்சான் தமிழன் உருவாக்குனான்னு பெருமை பேசுறத நிப்பாட்டுங்க. தலைவர் மாதிரி நம் பட்ட வலிய மக்களிடம் நியாபகத்திட்டே இருங்க. மறக்கடிக்க எதிரி பல விசயங்களை செய்கிறான். மக்கள் நம் அடிமைனு வலிய உணர்ந்து வெறில இருக்கும் போது இதோ சில கடல் மைல் தொலைவில் நம்ம போல் ஒருவன் தமிழன் உலகவல்லாதிக்கத்தையே எதிர்த்தான். நம்மால முடியாதானு தலைவர் பற்றி எழுதுங்கள் பேசுங்கள். தமிழர் பெருமை புகழ் பேச நினைப்பவர்கள் 1000 ஆண்டு பின்னோக்கி அகழாய்வு செய்ய வேண்டாம். கண் முன் வாழ்ந்த தலைவரையும் புலிகளையும் விட பெரிய புகழோ பெருமையோ அகழாய்வில் கிடைக்காது.
உலக வல்லாதிக்கத்தை எதிர்த்து நின்ற இந்த ஆண்மகனே தமிழர்களின் ஒப்பற்ற தலைவர். அவரே நம் குலசாமி.

“வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே”

About Thinappuyal News