ரணில்விக்ரமசிங்க ஓரினச்சேர்க்கையாளர் சர்ச்சையை ஏற்படுத்திய மைத்திரியின் இழிவான உரை! எழும் கடும் விமர்சனங்கள்

180

ரணில்விக்ரமசிங்க ஓரினச்சேர்க்கையாளர்

சர்ச்சையை ஏற்படுத்திய மைத்திரியின் இழிவான உரை! எழும் கடும் விமர்சனங்கள்

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய பேரணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாலியல் அர்த்தத்துடனான சொல்லை பயன்படுத்தி ஜனாதிபதி வர்ணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தனது இன்றைய உரையில் ரணில்விக்ரமசிங்கவின் மேற்பார்வையின் கீழ் வண்ணாத்திப்பூச்சிகள் கும்பலொன்று நாட்டை ஆட்சி செய்தது என குறிப்பிட்டுள்ளார்.

வண்ணாத்திப்பூச்சிகள் ஆட்சியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி சிரேஸ்ட அமைச்சர்கள் எந்த முக்கிய முடிவையும் எடுக்கவில்லை மாறாக ரணிலும் அவரது வண்ணாத்திப்பூச்சிகள் கும்பலுமே அனைத்து முடிவுகளையும் எடுத்தனர் என சிறிசேன தெரிவித்துள்ளார்

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த உரைக்கு கடும் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.

இதேவேளை, மைத்திரி வண்ணாத்திப்பூச்சிகள் என்ற சொல்லை பயன்படுத்தி ரணில்விக்ரமசிங்கவை ஓரினச்சேர்க்கையாளர் என குறிப்பிட்டுள்ளார் எனவும், சிங்களத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களை இழிவாக வண்ணாத்துப்பூச்சிகள் என குறிப்பிடுவது வழமை எனவும் மனித உரிமை ஆர்வலர் சுனந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டும் எனவும் சுனந்ததேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

SHARE