ரணிலே பிரதமர்! மைத்திரி, மகிந்தவை நியமித்தமை சட்டவிரோதமானது? சிரேஷ்ட சட்டத்தரணி தகவல்

42

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என சிங்கள தேசியவாதியான சிரேஷ்ட சட்டத்தரணியான கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

தேசிய தொலைக்காட்சி சேவையில் இன்று இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

19வது அரசியமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய பிரதமரை நியமிக்க வேண்டிய விதம் தொடர்பான விதிமுறைகள் இருப்பதாகவும் ஜனாதிபதி அதனை கவனத்தில் கொள்ளாமல் தவறு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்படவில்லை. தேர்தல் மனுவொன்றின் மூலமே பிரதமரை நீக்க முடியும். இதனடிப்படையில், ரணில் விக்ரமசிங்க தற்போது இருக்கும் நிலைப்பாடு சரியானதே.

ஜனாதிபதிக்கு விருப்பமான முறையில் பிரதமரை நியமிக்கலாம் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டாலும் அதனை தவறான முறையில் பயன்படுத்த முடியாது.

இதேவேளை, சரியான முறையிலேயே தனது விருப்பத்திற்குரிய நியமனத்தையும் வழங்க வேண்டும். ஜனாதிபதி தனது விருப்பத்திற்கு அமையஆர்.சம்பந்தனை பிரதமராக நியமிக்க முடிந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய அப்படி செய்ய முடியாது எனவும் கோமின் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

SHARE