இலங்கையில் முடங்கிய அரசாங்க சேவைகள்!

அரசாங்க திணைக்களம் மற்றும் நிறுவனங்களில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் செயலற்ற முறையில் காணப்படுவதாக அந்தந்த பிரிவுகளின் பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் விலகியமை மற்றும் அமைச்சர்கள் மீண்டும் நியமிக்கும் நடவடிக்கைகள் முழுமையடையாமையினால், இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் முழுமையாக தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக அரச பிரிவுகள் பாரிய சரிவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச சேவைகள் முழுமையாக கிடைக்காமையினால் நாட்டு மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News