புற்றுநோயை குணப்படுத்தம் கீரை

உலகை ஆட்டிப் படைக்கும் கொடிய வியாதிகளில் ஒன்றான புற்றுநோயை, முருங்கை கீரையைக் கொண்டு குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் முருங்கை கீரையானது புற்றுநோய் வரை குணப்படுத்தும் தன்மை கொண்டது என தெரிய வந்துள்ளது.

முருங்கை கீரையில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வைட்டமின் A, வைட்டமின்கள் B1, B2, B3, B6, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், ஜின்க், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன.

முருங்கை கீரையில் கொழுப்புகள் குறைந்த அளவே உள்ளன.

புற்றுநோய்க்கு மருந்து

முருங்கை கீரையானது நமது உடலில் புற்றுநோய் கட்டிகள் உருவாவதை முன்கூட்டியே தடுக்கும். அத்துடன் புற்றுநோய் கட்டிகள் உருவாகியிருந்தால் அவற்றை அழிக்கும் தன்மை இதற்கு உள்ளது.

இதற்கு காரணம் முருங்கையில் உள்ள Benzyl isothiocyanate எனும் மூலப் பொருள் தான்.

முருங்கையின் நன்மைகள்
 • கல்லீரலை சுத்தம் செய்யும்
 • நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்
 • உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அழிக்கும்
 • எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தும்
முருங்கை கீரை சாறு

தினமும் 300 மில்லி லிட்டர் அளவு முருங்கை கீரையின் சாற்றை குடித்து வந்தால், புற்றுநோய் கட்டிகள் எளிதில் நீக்க முடியும்.

இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும். முருங்கை சாற்றில் உள்ள Niazimicin மூலப்பொருள் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் செல்களை சிறிது சிறிதாக அழிக்கும். மேலும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முற்றிலுமாக தடை செய்யும்.

முருங்கை இலையை பொடி காப்சூல்களாக விற்கப்படுகின்றன. இவையும் நல்ல பலனை தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதர பயன்கள்
 • உடலின் தோல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் முருங்கை ஓர் அருமருந்து ஆகும். மேலும் இது சருமத்தை சுத்தமாகவும், கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும் வேலையையும் செய்கிறது.
 • கல்லீரல் பாதிப்படைவதை காப்பதில் முருங்கை கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
 • முடி உதிரும் பிரச்சனைக்கு முருங்கை கீரை நல்ல தீர்வினை தரும்.
 • ரத்த சோகை, செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் முருங்கை கீரையை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
 • முருங்கை கீரையை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தீய பாக்டீரியாக்கள் அழிவதுடன், குடல் புண்களும் சரியாகும்.
 • முருங்கை கீரையில் அதிகம் கால்சியம் இருப்பதால், எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படும். மேலும், வாரத்திற்கு 4 முறை முருங்கை கீரையை சாப்பிட்டால் எலும்பு தேய்மானம் சரியாகும்.
 • முருங்கை கீரை பசியின்மையை போக்கும். மேலும் மன அழுத்தத்திற்கு நல்ல தீர்வை தரும்.
இவர்கள் மட்டும் சாப்பிடக் கூடாது

கர்ப்பிணிப் பெண்கள் முருங்கை கீரையை அதிகளவில் சாப்பிடக் கூடாது.

நீரிழிவு நோயாளிகள் முருங்கையை சாப்பிட வேண்டும் என்றால், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். ஏனெனில், இது சில சமயங்களில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

About Thinappuyal News