முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்

144

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட் வெஸ்டன் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தல்வாக்கலையிலிருந்து கிரேட் வெஸ்டன் நேர்க கிச் சென்ற முச்சக்கர வண்டியும் கிரேட் வெஸ்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேராக மோதியே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துடன் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று தலைமறைவாகியுள்ளதால் அவ் வாகனத்தையும் அதன் சாரதியையும் தேடும் பணியை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

SHARE