வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள்

168

பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள் வழங்கும் நடவடிக்கை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பாடப்புத்தகங்கள், மாணவர்களுக்கான காப்புறுதி முறைகள் தொடர்பில் அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE