காதலனைத் தேடி தமிழகம் வந்துள்ள பெண்

43

உயிருக்கு உயிராக நேசித்த காதலனைத் தேடி மலேசிய இளம்பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் மெனேகா என்பவரே தமிழகத்தின் வெல்லூர் பகுதியை சேர்ந்த பசவராஜுவை தேடி தமிழகம் விரைந்தவர்.

மலேசிய நாட்டவரான 34 வயது மெனேகா சிங்கப்பூரில் பணிபுரியும்போது 32 வயதான பசவராஜுவை சந்தித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான மெனேகா பேஸ்புக் வழியாக பசவராஜுவுடன் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் இருவரும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். உறவினர்கள் திருமணத்திற்கு நிர்பந்திப்பதாக கூறி ஊருக்கு செல்வதாகவும், கிராமத்தில் உள்ள வழக்கப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

மேலும், உறவினர்களின் சம்மதம் கிடைத்த உடன் தகவல் தெரிவிப்பதாகவும், அதன் பின்னர் ஊருக்கு வரவேண்டும் என முகவரியும் அளித்துவிட்டு வந்துள்ளார் பசவராஜு.

ஆனால் அதன்பின்னர் பசவராஜுவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனையடுத்து சுற்றுலா பயணிகளுக்கான விசாவில் வெல்லூர் திரும்பிய மெனேகாவை பசவராஜுவின் குடும்பத்தார் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி பசவராஜுவை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசாரின் உதவியை நாடிய மெனேகா, தமது காதல் கதையை புகாராக தெரிவித்துள்ளார்.

தம்முடன் பசவராஜு ஒன்றாக குடியிருப்பது அவரது குடும்பத்தாருக்கு தெரியும் என்றும், தொலைபேசியில் பசவராஜுவின் உறவினர்களுடன் பலமுறை தாம் பேசியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போதெல்லாம் அவர்கள் மிகவும் பாசத்துடன் நடந்துகொண்டதாகவும், ஆனால் தாம் நேரிடையாக சென்றபோது அவர்கள் தம்மை கண்டுகொள்ளவில்லை எனவும் பொலிசாரிடம் மெனேகா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 27 ஆம் திகதி வரை தாம் பசவராஜுவுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் அவர் தொலைபேசி தொடர்பில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது விசா திகதி 2 வாரத்தில் முடிவடையும் எனவும், அதற்கு முன்னர் பசவராஜுவரை ஒருமுறை சந்திக்க வேண்டும் எனவும் அவர் பொலிசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE