ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தி ரங்கனா ஹெராத் புதிய சாதனை

166

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

அந்த அணியின் ஜோ ரூட் 35 ஓட்டங்களில் இருந்தபோது, இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் அவரை போல்டாக்கினார். இது காலே மைதானத்தில் ஹெராத் வீழ்த்தும் 100வது விக்கெட் ஆகும்.

இதன்மூலம், ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இவருக்கு முன்னர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் லார்ட்ஸ் மைதானத்தில் நூறு விக்கெட்டுகளையும், இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கண்டி, அஸ்கிரியா, எஸ்.எஸ்.சி ஆகிய மூன்று மைதானங்களில் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

ரங்கனா ஹெராத் இதுவரை 93 டெஸ்ட்களில் 431 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், இந்த போட்டி அவருக்கு பிரியாவிடை டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE