கடல் மீன்கள் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?

181

பொதுவாகவே ஏற்றுமதி செய்யப்படும் மீன் வகைகளில் நச்சு தன்மையுள்ள, நச்சு தன்மையற்ற மீன் இனங்கள் என அதிக இருக்க வாய்ப்புள்ளது.

மீன்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை தரும். வைட்டமின் டி, புரத சத்துக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தரும். அத்துடன் ஊட்ட சத்து குறைபாடுகள் வராமல் காக்கும்.

இருப்பினும் நச்சு தன்மை கொண்ட இந்த மீன்களை உண்டால் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும். சில சமயம் அது நம் உயிரையை பறித்துவிடும்.

நச்சு தன்மை கொண்ட கடல் மீன்களை சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்
  • ஆஸ்துமா
  • புற்றுநோய்
  • இதயம் சார்ந்த நோய்கள்
  • மன அழுத்தம்
  • நீரிழிவு
  • பார்வை குறைபாடு
  • மூளை நோய்கள்
  • குடல் கட்டிகள்
எந்தெந்த மீன்களை சாப்பிட கூடாது?

கெளுத்தி, இறால், விலாங்கு மீன், கடல் பாஸ் ஆகியவற்றில் பாதரச தன்மை அதிகம் காணப்படும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக சுறா மீன், வாள் மீன், திமிங்கலம் போன்றவற்றில் அதிக விஷ பொருட்கள் கலந்திருக்கும்.

யார் எல்லாம் கடல் மீன்கள் சாப்பிட கூடாது?

கடல் மீன்களை கர்ப்பம் அடைந்த பெண்கள் உண்டால் அவர்களின் கருவில் உள்ள சிசுவை அதிகம் பாதிக்கும்.

ஏனென்றால் பாதரசம் மிகவும் விஷத்தன்மை உடையது. மேலும் குழந்தைகள் பாதரசம் கலந்த கடல் நீரில் உள்ள மீன்களை சாப்பிடுவதால் சிறு வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு, கண் சார்ந்த பிரச்சினை, மூளை கோளாறு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

SHARE