விஸ்வாசம் படப்பிடிப்பில் அஜித் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்த நபர்

அஜித்தின் விஸ்வாசம் படம் தமிழ் சினிமா ரசிகர்களின் அடுத்த டார்க்கெட் படம். தல என்றாலே ஸ்பெஷல் தான், அவரையும் ரசிகர்கள் எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் என்று சொல்லி மாலாது.

சிவாவுடன் நான்காவது முறையாக அஜித் கூட்டணி அமைத்துள்ளார், படமும் கிராமத்து பின்னணியில் வீரம் பட டச்சில் இருக்கும் என்று தகவல்கள் வருவதால் தல ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. நடன கலைஞர் சரவணன் என்பவர் படப்பிடிப்பில் வாந்தி எடுத்துக் கொண்டு ஒரு மாதிரியாக இருந்துள்ளார்.

அவரின் உடல்நிலையை பார்த்த படக்குழு ரெஸ்ட் எடுக்க கூறியுள்ளனர், நேரம் ஆக ஆக அவரது உடல்நிலை மோசமானதால் அஜித் மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்ல உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஓ.எம். சரவணன் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார், இது அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

இதனால் மனம் உடைந்த தல 3 மணிநேரம் மற்ற நடன கலைஞர்களுடன் மருத்துவமனையிலேயே இருந்துள்ளார். பின் சரவணனின் உடலை பூனேவில் இருந்து சென்னை கொண்டு வர ரூ. 8 லட்சத்திற்கு செலவு செய்துள்ளாராம் அஜித்.

About Thinappuyal News