மாணிக்க கற்களை கடத்தி செல்ல முயற்சித்த நபர் கைது

31

இலங்கையிலிருந்து மலேசியா கோலாலம்பூருக்கு தனது மலவாயிலில் மறைத்து வைத்து மாணிக்க கற்களை கடத்தி செல்ல முயற்சித்த நபரொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பேருவளையைச் சேர்ந்த 43 வயதுடைய ஆணொருவர் ஆவார்.

தனது பயணப் பொதியில் மற்றும் மல வாயிலில் மாணிக்க கற்களை மறைத்து வைத்து இவர் விமானத்திற்குள் எடுத்து செல்ல முற்படுகையிலேயே சுங்க பிரிவினரால் தடுத்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளை அவதானித்த சுங்க பிரிவினர் இவரை தடுத்து சோதனையிட்ட வேளையில் அவரிடமிருந்து 297.79 கிராம் நிறையுடைய மாணிக்க கற்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட மாணிக்க கற்கள் ஒரு மில்லியனே ஐந்து இலட்சத்து நாற்பத்தாறாயிரத்து ஐநூற்றி பத்து ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை கைதுசெய்துள்ள விமான நிலைய சுங்க பிரிவினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE