வீடியோ கேம் ஒன்றை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல் – எச்சரிக்கை செய்தி

160

வீடியோ கேம் ஒன்றை பயன்படுத்தி இளவயது பிள்ளைகளை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கும் புதிய ஒரு அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கனடா பொலிசார் முயன்று வருகின்றனர்.

Montreal பகுதியில் இதுவரை நான்கு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், ஆன்லைன் வீடியோ கேம் ஒன்றை பயன்படுத்தி இளவயது பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோக திட்டம் ஒன்றிற்குள் சிக்க வைக்க முயலும் மனித மிருகங்களைக் குறித்து பொலிசார் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Fortnite எனப்படும் ஒரு ஆன்லைன் விளையாட்டை விளையாடும் குழு அல்லது நண்பர்களுக்குள் நுழையும் இந்த ஏமாற்றுக்காரர்கள், பிள்ளைகளின் நிர்வாணப்படங்களை அனுப்பினால் அந்த விளையாட்டில் முன்னேறிச் செல்ல வாய்ப்பளிப்பதாக ஆசை காட்டுவார்கள்.

தங்கள் நண்பர்கள் அல்லது தங்கள் வயதுள்ள ஒருவர்தானே என்ற எண்ணத்தில் அவர்களை விளையாட்டில் முந்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிள்ளைகளில் சிலர் தங்கள் நிர்வாணப் படங்களை அனுப்புவார்கள்.

ஆபாச நோக்கம் கொண்ட, வயது வந்த ஒரு ஆணுடன் விளையாடுகிறோம் என்பதை அவர்கள்

முதலில் அறிந்துகொள்வதில்லை.

இந்த படங்கள் இன்ஸ்டாகிராம் வழியாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

நிர்வாணப்படங்களை அனுப்பியபின், அந்த குறிப்பிட்ட நபர், மேலும் நிர்வாணப் படங்களை அனுப்பும் படி நச்சரிப்பார்.

அவ்வாறு அனுப்பாவிட்டால் ஏற்கனவே அனுப்பப்பட்ட படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவார்.

இதுவரை மூன்று வழக்குகளில் இளவயது பிள்ளைகள் நிர்வாண படங்களை அனுப்பும்படி மிரட்டப்பட்டுள்ளார்கள்.

ஒரு பிள்ளை பயந்து தன்னுடைய நிர்வாண படங்களை அனுப்பிவிட்டது.

இந்நிலையில் பெற்றோருக்கு இந்த விளையாட்டு மற்றும் அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள பொலிசார் பள்ளிகளுக்கும் இது குறித்து தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

SHARE