ஈபிள் கோபுர படிக்கட்டு ஏலத்துக்கு வர உள்ளது.

158

பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட, இரும்பிலான பழைய படிக்கட்டு இம்மாதம் ஏலத்துக்கு வர உள்ளது.

கடந்த 1889ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் அமைக்கப்பட்டபோது, உருவாக்கப்பட்ட இரும்பிலான படிக்கட்டுகள் தற்போது சோம்ப்ஸ்- எலிசே அருகேயுள்ள கட்டிடம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

முதன் முதல் ஈபிள் கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த படிக்கட்டுகள், இரண்டாவது தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு ஏறுவதற்குரிய படிக்கட்டாக இருந்தது.

நான்கு மீட்டர்களுக்கு மேற்பட்ட உயரத்தினையும், 25 படிகளையும் கொண்ட இவை கடந்த 1983ஆம் கோபுரத்தில் இருந்து அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக மின் தூக்கிகள் பொருத்தப்பட்டன.

இந்நிலையில், வருகிற 27ஆம் திகதி இந்த படிக்கட்டுகள் ஏலத்துக்கு வர இருக்கின்றன. இவற்றின் ஆரம்ப விலை 60 ஆயிரம் யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் இத்தாலி, சுவிஸ், பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்தும் பலர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

SHARE