விராட் கோலி சாதனையை முந்தினார் ரோஹித் சர்மா

20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்தியர் பட்டியலில் விராட் கோலியை முந்தி சாதனை படைத்தார் ரோஹித் சர்மா. 20 ஓவர் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். இவர் 2,102 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியா-–மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உ.பி.யின் லக்னோவில் புதிதாக கட்டப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியதீவு 9 விக்கெட்டுக்கு 124 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி விராட் கோலியை முந்தினார். தற்போது 20 ஓவர் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், 20 ஓவர் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஹித் சர்மா சொந்தக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News