இலுப்பைக்குளத்தில் பத்தடி நீளமான முதலை மீட்பு!

58

வவுனியா – இலுப்பைக்குளத்தில் பத்தடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசி திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, இன்று(வியாழக்கிழமை) காலை ஆறு மணியளவில் வவுனியா – இலுப்பைக்குள வீதியில் குறித்த முதலை காணப்பட்டுள்ளது.

அப்பகுதியில் குறித்த முதலயை அவதானித்த வயோதிபர் அப்பகுதி இளைஞர்களிற்கு தகவலை வழங்கியுள்ளார். இதனை அடுத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதலையை பிடிப்பதற்கு முற்பட்ட வேளை அவர்களை முதலை தாக்க முற்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த இளைஞர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிஸாருக்கும் அறிவித்ததையடுத்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முதலையை கடும் சிரமத்திற்கு மத்தியில் பிடித்து மன்னார் மடு வனஜீவராசிகள் திணைக்களத்திற்குள் கொண்டு சென்றுள்ளனர்.

SHARE