சமய வழிபாடுகளும், மனித முன்னேற்றமும்..!

84

கடவுளால் படைக்கப்பட்டு முழுமையாக செயற்படக்கூடிய உயிர் மனிதனாவான். ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு பல வழிமுறைகளையும் அறநெறி கருத்துக்களையும் சமயங்கள் போதிக்கின்றன. அதாவது இந்து சமயம் (பகவத்கீதை) கிறிஸ்தவ சமயம் (பைபிள்) இஸ்லாம் சமயம் (குர் ஆன்) பௌத்தம் (மகாவம்சம்) ஆகும்.

இவை அனைத்தும் மனிதனுக்கு எண்ணிலடங்காத பல நல்ல கருத்துக்களையும் ஒழுக்க விழுமியங்களையும் எடுத்தியம்புகின்றன. ஆனால் ஒரு மனிதன் மனிதனாக வாழ இப்போதனைகளும் கருத்துக்களும் வழிவகுக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு மதமும் தத்தம் மத கருத்துக்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று எண்ணி கடவுள் வழிபாடு மேற்கொள்கின்றான்.

இக்கடவுள் அதாவது இறை வழிபாடு மனித முன்னேற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் வழிமுறைகளை பார்க்கும் போது மனிதன் தவறு செய்யாமல் மனதால் பொய் உரைக்காமல் இருப்பதோடு கருணை, அன்பு, பாசம் பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் துன்பத்தில் பங்கு பற்றுதல் போன்ற செயற்பாடுகளை இறைவழிபாடும் ஆன்மீக நூல்களும் இவற்றைப் போதிக்கின்றன.

அவற்றை மனிதன் பின்பற்றி வாழவே ஒவ்வொரு சமயமும் கூறுகின்றன. ஆனால் தற்காலத்தை பொருத்தவரையில் ஒவ்வொருவரும் தமது குடும்பம் தமது பிள்ளைகள் தமது தொழில் என வாழ்வாதாரத்திற்காக அவசரமாக பயணிக்கின்றனர். யாரும் யாருக்கும் உதவி செய்யும் மனநிலையில் இல்லை எனவே மனிதம் தொலைந்து விட்டது எனவும் ஒரு சிலர் கூறுகின்றனர். சில வேளைகளில் வேலைப்பழு காரணமாகவும் சுயநல எண்ணங்களோடும் ஒரு சிலர் செயற்பட்டாலும் இன்னும் ஒரு பகுதியினர் அன்பாகவும் பொது நலத்தோடும் இவ் உலகில் வாழ்கின்றனர்.

இவ் நாட்டிற்கு’பைபிள், பகவத்கீதை, குர்ஆன், மகாவம்சம்’ என பல நல் உபதேச நூல்கள் இருந்த போதும். பல கொலைகள், திருட்டு, கர்ப்பளிப்பு, யுத்தங்கள், மனிதாவிமானமற்ற செயற்பாடுகள், சிறுவர்களை கொலை செய்தல், போதைப் பொருள் என பஞ்சமா பாதக செயற்பாட்டில் ஈடுபடும் மனிதர்களும் வாழ்கின்றனர். சைவசமயம் கூறுகின்றது ஒருவர் இன்னுமொருவரை கொலை செய்தால் அவருக்கு ஆத்மகத்தி தோசம் உண்டாகின்றது என்று ஆனால் சில வீட்டு வன்முறைகள் கொலைகள் துன்பங்கள் என தற்கால சமூகத்தில் மலிந்து காணப்படுகின்றது. இவைகளை எவ்வாறு தடுத்தல் என்று பார்க்கும் போது தண்டனைகள் வழங்கப்பட்டால் குற்றங்கள் குறையும் என்று கூறும் சட்டம் தண்டனைகள் வழங்கிக் கொண்டு தான் உள்ளது. ஆனாலும் குற்றங்கள் குறையவில்லை.

இவற்றை தடுப்பதற்காகவும் குறைப்பதற்காகவும் ஆன்மீக சிந்தனைகள், ஆன்மீக சொற் பொழிவுகள், இறைவழிபாடுகள் என மனிதன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அத்தோடு சமயங்கள் கூறுகின்ற சில வாழ்வியல் நடைமுறைகள் விஞ்ஞான ரீதியாக இன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

விரதம் எனப்படுவது மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம் வாக்கு காயம் எனும் மூன்றினாலும் இறைவனை மெய் அன்போடு வழிபடுவது விரதம் என சைவசமயம் கூறுகின்றது. விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது விரதங்கள் மனிதனுக்கு ஆரோக்கியமானதாகவே அமைகின்றது.

அத்தோடு தினமும் கோவிலுக்குச் செல்லுதல் இறைவனை வழிபடுதல் கோயிலை சுற்றி வழிபடுதல் போன்ற செயற்பாடுகள் மனதில் நல்ல சிந்தனைகளை உருவாக்கும். அத்தோடு எம்மனதில் நல்ல குணங்கள் குடியேறும் ஆகவே ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் நடைமுறையில் சமய வழிபாடுகள் இன்றி அமையாத ஒன்றாகவும் மாறிவிட்டது.

எனவே தான் நாம் இறைவனை மெய் அன்போடு வழிபட வேண்டும். இறைவழிபாடு என்பது மனிதனுடைய மனதோடு சம்மந்தப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. ஒரு மனிதன் கவலை, கஷ்டம், துன்பம் போன்றவை ஏற்படும் போது இறைவனின் சன்நிதிக்கு முன்நின்று வணங்கும் போது துன்பங்கள் நிவர்த்தியாகும் என்றும் மனம் நிம்மதியடையும் என்றும் கூறப்படுவதை நாம் உணர்கின்றோம். அத்தோடு இறைவழிபாடுகள் மனிதனுக்கு ஆத்ம திருப்தியை வழங்குகின்றது.

எனவே தான் இறைவழிபாடு மனிதனை செம்மையுறச் செய்கின்றது என்கின்றோம்.
இறைவழிபாடுகளில் இருந்து விடுபடும் மனிதன் எவ்வாறான மனநிலையில் வாழ்கின்றான் என்று பார்க்கும் போது அவர்களுடைய மனம் அன்பு, பாசம் இல்லாததோடும் கடவுளை நினைத்து பயம் கொள்ளாமையினாலும் சில தவறுகளை செய்ய துனிந்து விடுவான். அவனுடைய இந்த நிலைமை அவனை வேறு விடயத்திற்கு கொண்டு செல்லும். கஷ்டம் வரும் போது மது அருந்துவதோடு பல தீய வழிக்கு அவனை அழைத்து செல்கின்றது. ஏன் என்றால் அந்த மனிதன் மனதில் அன்பு, பண்பு, பாசம், அற்று தீயவைகள் குடியேறிவிடுகின்றன.

ஆன்மீக கருத்துக்களை செவிமெடுக்காதவர்கள் செய்யும் செயற்பாடுகள் இச்சமூகத்தில் நன்மை பயக்குவதில்லை. அவர்கள் எந்த பாதிப்பையும், பிரச்சினைகளையும் பற்றி சிந்திக்காமல் தீங்கு செய்வதால் சிலர் மனரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள். சமய வழிபாடுகளில் இருந்து தவறிய மனிதன் அவனுடைய வாழ்வியல் செயற்பாடுகளால் முன்னேறிசெல்ல இயலாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறானவர்களின் கருத்துக்களை சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே இந்த சமூகத்தில் முன்னேறி செல்வதனாலும் சரி ஒரு தலை சிறந்த மனிதனாக உருவாக வேண்டும் என்றாலும் சரி இறை வழிபாடும் ஆன்மீக சிந்தனையும் அவற்றில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

எனவே தான் ஆன்மீகச், சிந்தனைகளும் செயற்பாடுகளும் மட்டுமே ஒரு மனிதனை ஆக்கபூர்வமாக சிந்திக்க வைக்கின்றது. அத்தோடு அவை அம்மனிதனை முன்னேற்றப் பாதைக்கு வித்திடுகின்றது. ஆன்மீகமும் சமய வழிபாடுகளும் மனிதனை மனிதனாக வாழ வைக்கின்றது. அத்தோடு சைவசமயத்தில் 04 வகை வேதங்கள் உள்ளன. அதேவேளை மகாபாரதம் இராமாயணம் காவியங்கள் தீயவற்றை சிந்திக்கும் மனிதனுடைய செயற்பாடுகள் பற்றியும் மிகவும் அழகாக கூறி உள்ளார்கள்.

எனவே தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்க வேண்டிய பண்பு இருக்க கூடாத பண்பு அவ்வாறு இருப்பதனால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் பற்றியும் மிக அழகாக கூறப்பட்டுள்ளது. ஆணவம் கர்மம் மாயை என்பன ஒரு மனிதனை அழிக்கவல்லது என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்கள். சமயத்தையும் அதன் சடங்குகளையும் ஒரு மனிதன் பின்பற்றி வாழும் போது அங்கே அவன் பரிபூரணத்துவம் அடைகிற வாழ்வை வாழுகின்றான். எனவே தான் மனிதன் மனிதத்துடன் வாழ இறைவழிபாடுகளும் ஆன்மீக சொற்பொழிவுகளும் ஆதாரமாக திகள்கின்றது.

SHARE