முல்லைத்தீவில் உடைப்பெடுத்த குளம்! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்பில் புதிய தகவல்

36

முல்லைத்தீவில் நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அனர்த்தத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகைகுளம் நேற்று அதிகாலை உடைப்பெடுத்துள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

இதில் சிலர் மீட்கப்பட்ட போதும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை விமானப்படையினர் உலங்கு வானூர்தி மூலம் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE