ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டித்து மன்னாரில் மக்கள் பேரணி

மன்னார் நகர் நிருபர்
வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைதிரிபால சிரிசேனவின் அன்மைகால செயற்பாடுகள் ஜனநாயக விரோத செயற்பாடுகளாக காணப்படுவதாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரம சிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் தொடர்சியாக ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்து இன்று காலை 10 மணியலவில் மன்னார்    மாவட்ட செயலகத்துக்கு முன் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம் பெற்றது.
மன்னார் மவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி முகாமையாளர் ஜேம்ஸ் ப்ரிமிளஸ் மற்றும் மன்னார் மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பஸ்மி மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம்.
ரணிலை ஜனாதிபதி ஆக்குவோம். சஜித்தை பிரதமராக்குவோம்.
மைத்திரியே உன் அரசியல் அதிரடி எல்லாம் ராத்திரியே.
ஜனநாயக விரோத செயற்ப்பாடுகளை உடனே நிறுத்து என எழுதப்பட்ட பல்வேறு பததைகளை எந்தியவாரு போராட்டகாரர்கள் கோசங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News