உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரிய பின்னரே தேர்தல்!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்தை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கோரவுள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கோரிய பின்னரே அவர் பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து ஆராயவுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டவேளை சிறிசேன அரசமைப்பின் 19 வது திருத்தத்தினை மீறி நடந்துள்ளார் என்ற கருத்துக்கள் வெளியாகிவரும் சூழ்நிலையிலேயே தேர்தல் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

About Thinappuyal News