இறக்குமதி செய்யும் இலத்திரனியல் பொருட்களுக்கு மேலதிக வரி அறவிட தீர்மானித்துள்ள ட்ரம்ப்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் வைத்து வடிவமைத்தாலும் அனேகமானவற்றினை சீனாவில் வைத்தே அசெம்பிள் செய்கின்றது.

இதற்கு குறைந்த செலவில் அசெம்பிள் செய்யக்கூடியதாக இருக்கின்றமையே காரணமாகும்.

எனினும் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் இலத்திரனியல் பொருட்களுக்கு மேலதிக வரி அறவிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் கைப்பேசிகள் மற்றும் லேப்டொப்களின் விலை அதிகரிக்கும்.

இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டால் மொத்த வரியானது தற்போதுள்ள வரியுடன் சேர்த்து 25 சதவீதத்தை எட்டும்.

எவ்வாறெனினும் ட்ரம்ப்பின் இந்த முடிவினால் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Thinappuyal News