பார்சிலோனாவில் மொபைல் காங்கிரஸ் விழாவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு திட்டம்

ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2019ம் ஆண்டு பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளியாக இருக்கிறது. ஏற்னவே பல்வேறு நிறுவனங்கள் தங்களது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கின்றன.
அந்த வரிசையில் ஒப்போ நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது. இதனை ஒப்போ நிறுவனத்தின் சக் வாங் தெரிவித்தார்.
ஒப்போவின் 5ஜி ஸ்மார்ட்போன் 2020ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அந்நிறுவனத்தின் முதல் டிஸ்ப்ளே கட்அவுட் ஸ்மார்ட்போனும் அதே ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஃபைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஒப்போ வடிவமைப்பு அனைவரையும் கவர்ந்த நிலையில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தெரியவரும்.
ஹூவாய் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவற்றுடன் எல்.ஜி. நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் எல்.ஜி. நிறுவனம் ஃபிளெக்ஸ், ஃபோல்டி மற்றும் டூப்லெக்ஸ் என மூன்று பெயர்களை தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சூட்டுவதற்காக காப்புரிமைக்கு விண்ணப்பித்து இருக்கிறது.

About Thinappuyal News