17 வயதிலேயே தந்தையாகிய அலெக்ஸ்

பிரித்தானியாவில் 16 வயது காதலி குழந்தை பெற்ற நிலையில் 17 வயது சிறுவன் தந்தையான சம்பவம் நடந்துள்ளது.

Coronation Street உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் அலெக்ஸ் பெய்ன் (17).

சிறுவயதிலேயே தாயை இழந்த இவர், மதுவுக்கு அடிமையான தந்தையிடம் வளர்ந்த நிலையில் கடந்த 2008-ல் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார்.

பள்ளிப்படிப்பை படித்து கொண்டே நடிப்பிலும் அலெக்ஸ் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் லெவி செல்பி (16) என்ற மாணவியை கடந்தாண்டு முதல் அலெக்ஸ் காதலிக்க தொடங்கினார். இதையடுத்து லெவி கர்ப்பமாக இருப்பதாக கடந்த மே மாதமே தகவல் வெளியானது.

அதாவது, வயிற்றில் இருக்கும் தனது குழந்தையின் ஸ்கேன் செய்த புகைப்படத்தை லெவி சமூகவலைதளங்களில் வெளியிட்டார்

இந்நிலையில் தற்போது லெவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு லைடியா ரோஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அலெக்ஸ் 17 வயதிலேயே தந்தையாகியுள்ளார்.

இதையடுத்து அலெக்ஸ் மற்றும் லெவி ஆகிய இருவருமே குழந்தை மாதிரி தான், அவர்களுக்கு ஒரு குழந்தையா என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

About Thinappuyal News