மாரி-2 ரிலிஸ் திகதி

தனுஷ் நடிப்பில் மாரி படம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாக பல குறை இருந்தாலும், வசூல் நன்றாகவே இருந்தது.

இதை தொடர்ந்து தனுஷ் நம்பிக்கையுடன் இரண்டாவது பாகத்திற்கு பூஜை போட்டார், அதே கூட்டணியில் அனிருத்திற்கு பதிலாக யுவனை கமிட் செய்தார்.

இந்நிலையில் மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகிவிட்டது. இப்படத்தின் ரிலிஸ் தேதியை தற்போது தனுஷ் அறிவித்துள்ளார். இப்படம் டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார், ட்ரைலர் நாளை வருவதாக கூறியுள்ளார்.

மேலும், விஷாலுக்கும், தனுஷிற்கும் பனிப்போர் நடந்து வருவதாகவும், விஷால் வெளியிடும் KGF படத்திற்கு போட்டியாக தான் தனுஷ் இதை வெளியிடுகிறார் என்றும் சில பேச்சுக்கள் இருந்து வருகின்றது.

About Thinappuyal News