சேரனின் படத்தில் இணையும் விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படங்கள் என்றாலே தரமாக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. அவரும் அதற்கு ஏற்றார் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுவார், அவருக்கு என்றே படங்களும் அமையும்.

ஒரு படத்தில் வில்லனாக அசத்துவார் அடுத்த படத்தில் நாயகனாக கலக்குவார். அடுத்து வயதான கிழவனாக இவர் நடித்துள்ள சீதக்காதி படம் திரைக்கு வர இருக்கிறது.

தெலுங்கில் சிரஞ்சீவி-நயன்தாரா நடிப்பில் தயாராகும் Sye Raa Narasimha Reddy என்ற படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

இவர் அடுத்து நான்கு முறை தேசிய விருது வாங்கிய இயக்குனர் சேரனுடன் இணைய இருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.

சேரன் இறுதியாக 2015ம் ஆண்டு ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கியிருந்தார்.

About Thinappuyal News