இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `என்ஜிகே’

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே’. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே என்ஜிகே படத்திற்கு இசையமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

About Thinappuyal News