பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  கடிதம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலிபான் கிளர்ச்சியாளர்கள்  கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த தாக்குதலினால்  நமது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உங்கள் பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு நீங்கள் முன்னுரிமை வழங்கவேண்டும். எனவே தலிபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு வழங்கவேண்டும். சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

அல்- குவைதா தலைவர் பின்லேடனுக்கு அபோதாபாத் நகரில் அடைக்கலம் கொடுத்ததை பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு செய்த துரோகம் என்று கடந்த வாரம் ட்ரம்ப் விமர்சித்து இருந்த நிலையில் இந்த கடிதத்தை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News