விராட்கோலியை வீழ்த்துவது எப்படி?

இந்தியா அணிக்கு எதிரான  டெஸ்ட் போட்டியில்  அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விராட்கோலியை பகைமையுடன் அணுகவேண்டும்  என முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கிபொன்டிங் தெரிவித்துள்ளார்

மைதானத்தில்  அவுஸ்திரேலிய வீரர்களின் உடல்மொழி விராட்கோலியை பகைமையுடன் எதிர்க்கும் விதத்தில் அமைந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மண்ணில் எங்கள் அணியுடன் மோதல் போக்கினை எவரும் பின்பற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க கூடாது என ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியினர் எங்கள் மண்ணில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்

விராட்கோலியுடன் வாய்த்தகராறில் ஈடுபடவேண்டிய அவசியமி;ல்லை அவரை அச்சுறுத்தும் விதத்தில் பந்து வீசுவதுடன் அவரை எதிர்க்கும் உடல்மொழியை வெளிப்படுத்தவேண்டும் என ரிக்கி பொன்டிங் குறிப்பிட்டுள்ளார்

மிட்ச்செல் ஜோன்சன் கடந்த காலங்களில் இதனை சாதித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் வாயை பயன்படுத்துவதை விட வேறு வழிகளில் நீங்கள் உங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவேண்டும்,உங்கள் செயல்கள் உங்கள் திறமைகள் மூலம் நீங்கள் இதனை செய்தால் நிச்சயம் எதிரணியை தடுமாறச்செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விராட்கோலி விளையாடும்போது அவர் பவுன்டரிகளை பெறுவதையும் ஓட்டங்களை பெறுவதையும் கடினமாக்கவேண்டும் எனவும் ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.

About Thinappuyal News