ஆண்டுதோறும் 13.5 இலட்சமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

5 முதல் 29 வயது வரையான  இளம் வயதினர் உயிரிழப்புகளுக்கு வீதி விபத்துகள்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.

2016 ஆம் ஆண்டு புள்ளிவிபரம்படி,வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13.5 இலட்சமாக அதிகரித்துள்ளது.

அதாவது, 24 விநாடிகளுக்கு ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். 2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 12.5 இலட்சம் உயிரிழப்புகளோடு ஒப்பிடுகையில் இது 1 இலட்சம் அதிகமாகும். இந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டுகளில் இன்னும் மோசமான அளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal