வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி 01 உட்பட துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ள தாக பொலிஸ் அத்தியட்சர் ருவாண் குணசேகர தெரிவித்தார்.

உடுகம – கொத்தல்லாவ வீதியில்   இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிஞ்சை காட்டியும்  அதில் பயணித்தோர் நிறுத்தாது தப்பிச்சென்று  மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் பிரதான மின் விளக்கு ஒளிராமையின் காரணமாகவே பொலிசார் மேற்படி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர்களை சமிஞ்ஞை காட்டி நிறுத்த முற்பட்டுள்ளனர்.

ஆயினும், அதில் பயணித்தோர் தப்பி சென்று மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர் . அதனையடுத்து , மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி 01 உட்பட துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவாண் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நேற்று  இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் , சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் , வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தப்பிச்சென்ற சந்தேக நபர்களை  தேடும் நடவடிக்கைகளை உடுகம பொலிசார் முன்னெடுத்து வருவதாகவும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

About Thinappuyal