தம்புள்ளை வீதியில் வாகன விபத்தது.

குருநாகல் – தம்புள்ளை வீதியில் கலவெல – கனாதன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்றும், வெங்காயத்தை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தியொன்றும் மோதுண்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பேருந்தின் சாரதியும், இரண்டு பயணிகளுமே காயமடைந்துள்ளனர்.

பேருந்தின் அதிக வேகம் மற்றும் சீரற்ற காலநிலையால் வீதியில் வழுக்கிச் சென்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

About Thinappuyal