ஒருவரின் பால் மற்றும் வயதை துல்லியமாக கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது மனிதர்களை போலவே சிந்தித்து செயலாற்றக்கூடிய இயந்திரங்கள் ஆகும்.

இவை கணினிகளாகவோ அல்லது ரோபோக்களாகவோ இருக்கலாம்.

இவ்வகை தொழில்நுட்பமானது இன்னும் முழுமை பெறாத நிலையில் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றினை வைத்து அதில் உள்ளவரின் பால் மற்றும் வயதை துல்லியமாகக் கணிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட அன்ரோயிட் மொபைல் அப்பிளிக்கேஷன் ஒன்று ஏற்கனவே காணப்படுகின்றது.

எனினும் இதனை விட 90 சதவீதம் துல்லியமாகவும், விரைவாகவும் செயற்படக்கூடிய வகையில் இப் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

About Thinappuyal News