இருமலை போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்

பொதுவாக காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நம்மில் பலருக்கு சளியுடன் சேர்த்து இருமலும் வந்துவிடுகின்றது.

இதனை எளிதில் போக்குவதற்காக நாம் அடிக்கடி மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துப்பொருட்களை மருத்துவரிடம் ஆலோசிக்கமாலே வாங்கி குடித்துவிடுகின்றோம்.

இருப்பினும் இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள் பற்றி பார்ப்போம்.

 • வெறும் தேனை எடுத்து சாப்பிடலாம் அல்லது தேனுடன் சிறிதளவு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்தும் பருகலாம்.
 • தினமும் இரண்டு முறை இதனைச் செய்து வர மூன்று நாட்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கணும்.
 • நீரில் தைம் இலைகளை போட்டு பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி சூடு ஆறியதும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
 • குளிர் மட்டுமல்ல அதிக சூடு இருந்தாலும் இருமல் ஏற்படும். இருமலைத் தவிர்க்க சூடான நீரை பருகுங்கள்.
 • நிறைய மசாலா கலந்த உணவை சாப்பிட்டிருந்தால் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை பருகலாம்.
 • ஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு மிளகு கலந்து அப்படியே சாப்பிடலாம் அல்லது சூடான நீரில் தேன் மற்றும் மிளகு கலந்தும் குடிக்கலாம்.
 • உடலில் போதிய அளவு தண்ணீர்ச் சத்து இல்லையென்றாலும் இருமல் தோன்றும். இருமல் வரும் போது மட்டும் தண்ணீர் எடுத்துக் குடிக்காமல் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்.
 • நீரில் சிறிதளவு இஞ்சியை தோல் சீவி நறுக்கி கொதிக்க வைத்திடுங்கள் சுமார் 20 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வேண்டும். இஞ்சியின் தன்மை முழுவதும் நீரில் இறங்கியதும் நீரின் நிறம் மாறிடும். அப்போது அதனை இறக்கிடலாம். நன்றாக சூடு ஆறியதும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். வேண்டுமென்றால் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
 • 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிண்ட வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
 • இருமல் இருப்பவர்கள் மாதுளம்பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறு கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
 • நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அருந்தி வர வறட்டு இருமல் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். இதில் சர்க்கரை அல்லது தேனுக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கலாம்.
 • ஒரு கைப்பிடி அளவு புதினாவை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள் இவற்றுடன் இரண்டு டீஸ்ப்பூன் மிளகு த்தூள் மற்றும் ஒரு டீஸ்ப்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
 • நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை நீக்கும்.
 • ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம்.
 • ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் தேன் கலந்து சாப்பிடலாம். இப்படிச் செய்வதனால் இருமல் குணமாகும்.
 • மிளகையும் வெல்லத்தையும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதனால் இருமலைக் கட்டுப்படுத்தலாம்.
 • வெறும் ஏலக்காயை கடித்து மென்று சாப்பிட்டால் கூட அதிலிருக்கும் அமிலம் இருமல் வருவதை தடுத்திடும்.
 • ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் கற்கண்டு இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் சரியாகும்.

About Thinappuyal