காரசாரமான மீன் தொக்கு

சூப்பரான காரசாரமான மீன் தொக்கு

தேவையான பொருட்கள் :

முள் இல்லாத மீன் – 250 கிராம்,

சோம்பு – சிறிதளவு,

வெந்தயம் – சிறிதளவு,
நசுக்கிய பூண்டு – 6
பெருங்காய பவுடர் – சிறிதளவு,
தக்காளி – 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்,
சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

தக்காளியை அரைத்து கொள்ளவும்.

மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், பெருங்காய பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி நன்றாக வதக்கியதும் மீனை அதில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

நன்றாக தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான மீன் தொக்கு ரெடி.

About Thinappuyal