தொழிற்சங்களுக்கு அழுத்தங்களை பிரயோகின்றனவே தவிர கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை.

கூட்டு ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் கையாளாகாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு பெருந்தோட்ட மற்றும் தொழில் அமைச்சு ஆகியவையும் தொழிற்சங்களுக்கு அழுத்தங்களை பிரயோகின்றனவே தவிர கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை.

எனவே தான் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் வெற்றிபெற முடியாதுள்ளது என பெருந்தோட்ட உழைப்புரை ஒன்றியத்தின் பொதுச் செயளாலர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பாக நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

About Thinappuyal