அடுத்த படத்திற்கு தயாராகி வரும் விக்ரம்

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, அவரது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் டீசர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
View image on TwitterView image on TwitterView image on Twitter
கடாரம் கொண்டான் படப்பிடிப்பு நிறைவு பெற்றதால், விக்ரம் அடுத்ததாக கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். விரைவில் மகாவீர் கர்ணா படத்திலும் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News